அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘யானை’ படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘சாமி 2’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ஹரி இயக்கியுள்ள படம் ‘யானை’. இந்தப் படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ளார். மேலும், இந்தப்படத்தில் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், ‘கே.ஜி.எஃப்.’ புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகிய பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

image

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள ‘யானை’ படத்தின் டீசர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘யானை’ படம் மே 6-ம் தேதி என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விநியோகிஸ்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, ஜூன் 17-ம் தேதி ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கிடையில், நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அருண் விஜய், அவரது மகன் அர்னவ் விஜய், அவரது தந்தை விஜயகுமார், மகிமா நம்பியார் நடித்துள்ள ‘ஓ மை டாக்’ படம்’, ஏப்ரல் 21-ம் தேதி, அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.