நடிகர் விஜயின் ‘தளபதி 66’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘மாஸ்டர்’ வெற்றிப் படத்திற்குப் பிறகு, நடிகர் விஜய் நடித்து, நேற்று முன்தினம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியானப் படம் ‘பீஸ்ட்’. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பே, நடிகர் விஜய் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பதாக பேச்சு எழுந்தது. அதனை உறுதிசெய்யும்வகையில், கடந்த வாரம் ‘தளபதி 66’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டு, படத்திற்கு பூஜையும் போடப்பட்டு, படப்பிடிப்பு துவங்கியது.

image

எஸ்.வி.சி. கிரியேஷன் தயாரிக்கும் இந்தப் படத்தை, தமிழில் கார்த்தி, நாகர்ஜூனா நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் தமன் இசையில் இப்படம் உருவாகிறது. நடிகை ராஷ்மிகா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புடன், பாடல் ஒன்றும் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய், தெலுங்கில் நேரடியாக முதன்முறையாக அறிமுகமாகும் இந்தப் படம் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.