ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேலசத்திரம் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், பத்துக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. இந்தக் கடைகளுக்கு, மாத வாடகையாக ரூ.1,300 வசூலிக்கப்பட்டு வந்திருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்திருக்கின்றனர். பலமுறை அறநிலையத்துறை சார்பில் வாடகை பாக்கி செலுத்தக் கோரி அறிவுறுத்தியும் கடை உரிமையாளர்கள் அலட்சியமாக இருந்து வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி பத்து கடைகளின் உரிமையாளர்களுக்கும் வருகிற 15-ம் தேதிக்குள் தலா ஒரு லட்சத்து முப்பதாயிரம் வீதம், ரூ.13 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தவில்லை என்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

கடைக்கு சீல் வைக்கும் அலுவலர்

ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் வாடகை பாக்கியை கட்டாமல் உரிமையாளர்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில், இன்று இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வியாபாரம் செய்து கொண்டிருந்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.