சுரங்க தொழிலை மேலும் வலுப்படுத்த நிலையான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.

கனிமவளப்பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விதிகள் (MCDR), 2017- ல் அத்தியாயம்-V -ன் கீழ் சுரங்க தொழிலுக்கான நிலையான விதிகளை சுரங்கத்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.

India Inc gives a thumbs up to mining reform bill

கனிமவளப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விதிகள்- 2017-ம் விதி 35-ன் படி, சுரங்கத் தொழிலாளர்கள் பின்பற்றும் நிலையான சுரங்க நடைமுறைகளின் அடிப்படையில் சுரங்க குத்தகைகளுக்கு நட்சத்திர மதிப்பீட்டை வழங்குகிறது. தேசிய கனிமக் கொள்கை-2019-ல் நிலையான சுரங்கத் தொழில் நடைமுறைகளுக்கு நிதி ரீதியான சாத்தியக்கூறுகள்; சமூக பொறுப்பு; சுற்றுச்சூழல், நீண்ட கால மேம்பாட்டுக்கு உகந்த தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த வலுவான நடைமுறைகள்; கனிம வளங்களின் பயன்பாடு மற்றும் சுரங்கத்தின் மூடலுக்குப் பிந்தைய நிலப் பயன்பாடுகளை உறுதி செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.

தனியார் சுரங்கத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து சுரங்கத் தொழிலாளர்களும் கனிமவளப்பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விதிகள் (MCDR), 2017- ல் அத்தியாயம்-V -ன் கீழ் நிலையான சுரங்க விதிகள் மற்றும் குத்தகைகளை மதிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்ட நட்சத்திர மதிப்பீட்டு முறை ஆகியவற்றை  பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ministry of Mines (India) - Wikipedia

கனிமவளப்பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விதி 35(2)-ன்  கீழ் நட்சத்திர மதிப்பீடு கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் ஒவ்வொரு சுரங்க குத்தகைதாரரும் ஆண்டுதோறும் ஒவ்வொரு நிதியாண்டிற்கான சுய மதிப்பீட்டு அறிக்கையை ஜூலை 1-ம் தேதிக்கு முன் ஆன்லைன் மூலம் சுரங்க குத்தகையின் டிஜிட்டல் படங்களுடன் இந்திய சுரங்கப் பணியகத்தின் மண்டலக் கட்டுப்பாட்டாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடம் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

MCDR விதி எண்35 (4)-ன்  படி, சுரங்க குத்தகையை வைத்திருக்கும் ஒவ்வொருவரும், சுரங்க நடவடிக்கைகள் தொடங்கிய நாளிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் குறைந்தபட்சம் மூன்று நட்சத்திர மதிப்பீட்டை அடைய வேண்டும், அதன்பின் ஆண்டுதோறும் அதனை பராமரிக்க வேண்டும். இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.