காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு (Intergovernmental Panel on Climate Change = IPCC) பெர்லினில் காலநிலை மாற்றத்தால் சமூகப் பொருளாதார மற்றும்  இயற்கை அமைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தகவமைப்பதற்கான வழிகள் குறித்த அறிக்கையை இன்று வெளியிட்டது. 

தற்போது ஐ.பி.சி.சி இரண்டாவது பணிக் குழு காலநிலை மாற்றத்தின் காலநிலை மாற்றத்தின் தாக்கம், தகவமைத்தல் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை ‘பூவுலகின் நண்பர்கள்’ சுற்றுச்சூழல் அமைப்பு பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது. அது குறித்து பார்க்கலாம். 

image

>கடுமையான மற்றும் தீவிர காலநிலை நிகழ்வுகள் உள்ளிட்ட மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை நிலை மாற்றத்தால் இயற்கைக்கு அப்பாற்பட்ட அளவிற்கு உலகம் முழுவதும் இயற்கைக்கும் மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 

>காலநிலை மாற்றத்தால் உலகின் பல்வேறு பிராந்தியங்களிலும் ஏற்கனவே விளிம்பு நிலையிலும் அபாய கட்டத்திலும் இருக்கும் மக்களும் இயற்கை அமைப்புகளும் அளவுக்கு மீறிய வகையில் பாதிப்படைந்துள்ளன.

>உலகம் முழுவதும் 330 முதல் 360 கோடி மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிப்படையும் நிலையில் வாழ்கின்றனர்.

>தீவிர காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் புவி வெப்பநிலை உயர்வால் மீள முடியாத பாதிப்புகள் ஏற்பட்டு இயற்கை மற்றும் மனித அமைப்புகள் இனிமேல் தகவமைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

image

>தற்போது நிலவக்கூடிய சூழலியலுக்கு எதிரான வளர்ச்சிக் கொள்கைகள் மனிதர்களையும் சூழல் அமைப்புகளையும் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை அதிகம் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

>சமூக பொருளாதார மேம்பாடு, நிலையான கடல் மற்றும் நிலப்பயன்பாடு இல்லாத, சமத்துவமின்மை நிலவும், விளிம்பு நிலையில் அதிகம் பேர் வசிக்கும் மற்றும் காலனியாதிக்கம் நிலவுகிற பிராந்தியங்களில் கணிசமான அளவில் மனிதர்களும் சூழல் அமைப்புகளும் காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிப்படைகின்றனர்.

>இன்னும் சில ஆண்டுகளில் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயரும் பட்சத்தில் தவிர்க்க முடியாத வேகத்தில் தீவிர காலநிலை பேரிடர்களும், மனிதர்கள் மற்றும் சூழல் அமைப்புகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும்.

>புவி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்த முழுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஏற்படப் போகும் பாதிப்புகளை முற்றிலுமாக தடுக்க முடியாது. 

>காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும் நாளுக்கு நாள் சிக்கலானதாகவும் கையாள்வதற்கு மிகவும் கடினமானதாகவும் மாறக்கூடும். 

>ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தீவிர காலநிலை பேரிடர்கள் நிகழும் எண்ணிக்கை அதிகரிக்கும் மேலும் காலநிலை மாற்றம் அல்லாத பிரச்சனைகளும் சேர்ந்தே நிகழும்போது சமாளிக்க முடியாத பிரச்சனையாக மாறக்கூடும். அத்தகைய சமயங்களில் காலநிலை மாற்றத்தை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வேறு சில புதிய பிரச்சனைகளை உருவாக்கும்.

>வரும் தசாப்தங்களில் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை விட அதிகரித்தால் பல மனித மற்றும் சூழல் அமைப்புகள் 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உள்ளாக  வெப்பநிலை இருக்கும் போது ஏற்படும் பாதிப்புகளை விட கூடுதல் பாதிப்புகளையும் அபாயங்களையும் சந்திக்கும். 

image

ஐ.பி.சி.சி?

Intergovernmental Panel on Climate Change (IPCC) என்றழைக்கப்படும் இந்த அமைப்பு 1988ம் ஆண்டு உலக வானிலை அமைப்பு மற்றும்  ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தால் தொடங்கப்பட்டது. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையிலான கொள்கைகளை உருவாக்க அரசாங்கங்களுக்கு அறிவியல் ரீதியிலான தகவல்களை வழங்குவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.