ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை விரைவில் தடை செய்ய வேண்டும் என்று, உலகளவில் நான்கில் 3 பேர், அதாவது 75% மக்கள் விரும்புவதாக கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நாள்தோறும் நாம் பயன்படுத்தும் நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களால், சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபாடு அடைந்து வருகிறது. இதையடுத்து ஐக்கிய நாடுகள் சபை, பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கத் தயாராகி வருகிறது. இந்நிலையில், ஐபிஎஸ்ஓஎஸ் (IPSOS – global market research and public opinion specialist), 28 நாடுகளில் 20,000-க்கும் அதிகமான மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

அதன்படி, 2019-ம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் தடைகளுக்கு 71% மக்கள் ஆதரவு தெரிவித்து வருவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறைந்த பிளாஸ்டிக் பேக்கேஜிங் கொண்ட தயாரிப்புகளை விரும்பும் மக்கள் சதவிகிதம் 75%-லிருந்து 82% ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தக்கருத்து கணிப்பின் முடிவில் வளரும் நாடுகளான கொலம்பியா, மெக்சிகோ மற்றும் இந்தியா போன்ற நாடுகள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடைகளுக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

image

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான மக்களின் இந்தக் கருத்துகள், சுற்றுச்சூழல் ஒப்பந்தம் என்று கூறப்படும், பிளாஸ்டிக் கழிவுகளைச் சமாளிப்பதற்கான ஒரு லட்சிய ஒப்பந்தத்தை, அரசாங்கங்கள் முன்னெடுத்துச் செல்ல உதவும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உலக வனவிலங்கு நிதியம் (WWF – World Wildlife Fund) இதுகுறித்து கூறுகையில், பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு, ஐக்கிய நாடுகள் சபை உடன்படவில்லையெனில், வரும் பத்தாண்டுகளில் பரவலான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், சில கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து, பவளப்பாறைகள் மற்றும் சதுப்புநிலங்கள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளை அது அழித்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.