சமந்தா நடித்துவரும் ‘யசோதா’ படத்திற்காக ரூ.3 கோடியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா ‘யசோதா’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டு படப்பிடிப்பைத் துவங்கியது படக்குழு.

சமந்தா எழுத்தாளராக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த நிலையில், படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தினை கன்னடம், மலையாளம், இந்தியிலும் ஒரே நேரத்தில் டப் செய்தும் வெளியிடவுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்திற்காக கலை இயக்குநர் அசோக் மேற்பார்வையில், முக்கியமான காட்சிகளுக்காக 3 கோடி மதிப்பிலான பிரமாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

image

இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் பேசும்போது, “சமந்தா நாயகியாக நடிக்கும் எங்களின் பிரமாண்ட படைப்பான ‘யசோதா’ படத்தின் கதை 30 முதல் 40% காட்சிகள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தான் நடக்கிறது. இதற்காக நாங்கள் பல நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றோம், ஆனால் இதுபோன்ற ஹோட்டல்களில் 35, 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது மிக சிரமமாக இருந்தது. எனவே, கலை இயக்குனர் அசோக்கின் மேற்பார்வையில் நானக்ராம்குடாவின் ராமாநாயுடு ஸ்டுடியோவில் 3 கோடி மதிப்பிலான 2 மாடிகள் கொண்ட பிரமாண்ட செட் ஒன்றைத் அமைக்க முடிவு செய்தோம். இதில், 7 முதல் 8 செட் டைனிங் ஹால், லிவிங் ரூம், கான்ஃபரன்ஸ் ஹால், லைப்ரரி என ஒரு 7 ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் உள்ள அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டது.

image

image

image

பிப்ரவரி 3-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி, சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோரின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. டிசம்பர் 6 முதல் கிறிஸ்மஸ் வரை முதல் கட படப்பிடிப்பு முடித்து, ஜனவரியில் சங்கராந்திக்கு முன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்துள்ளது, எஞ்சியுள்ள முக்கிய காட்சிகள் கொடைக்கானலில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்து, இப்படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

கலை இயக்குநர் அசோக், ‘ஒக்கடு’ படத்தின் பிரமாண்ட சார்மினார் செட் மற்றும் பல்வேறு படங்களில் பிரமாண்ட அரங்குகள் அமைத்ததற்காக பிரபலமானவர். அவர் தெலுங்கு மற்றும் தமிழில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதைக்கு ஏற்ற சிறந்த அரங்குகளை அமைத்து புகழ் பெற்றுள்ளார்.யசோதா செட் அவரது திறமையை மேலும் சிறக்க்க செய்வதாக இருக்கும் என்று பாராட்டிப் பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.