இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலுக்கு காரணம், விக்னேஷ் சிவனின் இன்றைய இன்ஸ்டா போஸ்ட் தான். தோனிக்கு பூங்கொத்து அளிப்பது போன்ற ஒரு புகைப்படத்துடன், `என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோ, என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம்…. இவருடன் நான் இருக்கும் இந்த புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் போட்டாலும், அது அவரை நான் சந்தித்த அந்த நொடியில் எனக்கு ஏற்பட்ட உணர்வை முழுமையாக வெளிப்படுத்தாது.

வாழ்க்கை மிகவும் அழகானது என்பதை நான் உணர்ந்த தருணம் அது. இப்படியான ஒரு தருணத்தை உருவாக்கிக் கொடுத்தமைக்காக, இந்த காலத்துக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நான் அவரை இன்று சந்திக்கையில், ஒரு நல்ல கதையுடன் சந்தித்தேன். விரைவில் அவருக்கு ஆக்‌ஷன் சொல்லி அவரை இயக்கும் நாள் வரும்!” என்று குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.


இதன்மூலம், தோனி சினிமாவில் நடிக்க உள்ளோர் என்பதுபோன்ற தகவல்கள் பரவிவருகின்றன. இதுவரை விளம்பரப் படங்களில் மட்டுமே தோனி நடித்துவந்த நிலையில், இதுவும் விளம்பரப்படமாகத்தான் அமையுமா, அல்லது விக்னேஷ் சிவனின் வழக்கமான பாணியான ரொமாண்டிக் காதல் திரைப்படமாக அமையுமா என்பது வரும் நாள்களில்தான் தெரியவரும்.

சமீபத்திய செய்தி: வாக்களிக்கும் போது செல்ஃபி.. வைரலான புகைப்படம் – கான்பூர் மேயர் மீது பாய்ந்தது வழக்கு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.