தி.மு.க அமைச்சரவையில் மீன் வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன்.

இவர், 2001 – 2006 காலகட்டத்தில் அ.தி.மு.க அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 4.90 கோடி சொத்து சேர்த்ததாக 2006-ம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.

அது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. கடந்த ஆண்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவர் குடும்பத்தினர் 6 பேருக்கு இந்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகக் உத்தரவிட்டிருந்தது.

ஜெயலலிதாவுடன் அனிதா ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில், இந்திய அமலாக்கத்துறை தற்போது தி.மு.க அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் 160 ஏக்கர் நிலம் உட்பட 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கி உத்தரவிட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை விளக்கமளித்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.