மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “ஜனாதிபதியின் உரையில் எந்த பிரச்னை பற்றியும் ஆழமாகக் குறிப்பிடப்படவில்லை. நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அந்த உரையில் எதுவும் இல்லை. வேலைவாய்ப்பின்மை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. நீட் தேர்வை விலக்க வேண்டும் எனத் தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் நீட் விலக்கு கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறது. உங்களுடைய வாழ்நாளில் உங்களால் தமிழ்நாட்டு மக்களை ஒரு நாளும் ஆளவே முடியாது.

பஞ்சாப் விவசாயிகள் வேளாண் சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூடாது. வெறுமனே ராஜாவான பிரதமர் மட்டுமே குரல் எழுப்ப முடிகிறது. இங்கு மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக எந்தக் குரலும் எழுப்ப முடிவதில்லை.
மாநில கூட்டாட்சி என்றால் என்ன? அர்த்தம் தெரியுமா? ஒரு மாநிலத்தோடு பேசுவது, அதன் பிரச்சனைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது. தமிழ்நாட்டுக்கு நான் சென்றால் அவர்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்பேன்” என்றார்.
ராகுலின் இந்த உரையால் நாடாளுமன்றத்தில் பெரும் அமலி ஏற்பட்டது.
Also Read: மோடி ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் மோசமடைந்துள்ளதா? `CVoter’ கருத்து கணிப்பு சொல்வது என்ன?