மனித குலத்தை அச்சுறுத்தும் காற்று மாசு: 

காற்று மாசு என்பது மனிதர்களின் செயல்களால் தனது இயற்கை தன்மையை இழந்து நச்சுப் பொருளாக மாறுவதை குறிக்கும். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும், காற்று மாசு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

image

காற்று மாசு மிகவும் மோசமானது. ஏனெனில், நச்சுக்காற்று எல்லா இடங்களுக்கும் விரைவில் பரவி மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பஞ்சாப், ஹரியானாவில் எரிக்கப்படும் கோதுமை பயிர்களால் ஏற்படும் புகை, தலை நகர் டெல்லியில் வாழும்  மக்களை பாதிப்பது போல.

எனவே, காற்று மாசுபாடு பற்றி எல்லோரும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தனியார் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் குழந்தைகளுக்கும் காற்று மாசு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. 

கடந்த 142 ஆண்டுகளாக தான் பூமியின் வெப்ப நிலை பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதில் அதிகபட்சமாக வெப்பம் பதிவான வருடம் கடந்தாண்டு (2021) ஜூன் மாதம் தான். அதாவது நிலம் மற்றும் கடல்  பகுதியில் நிலவி வந்த சராசரி வெப்ப நிலை 15.8 டிகிரி செல்சியஸை விட 0.93 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. 

சென்னையில் கடந்தாண்டு அதிகபட்ச வெப்ப நிலையாக 46 டிகிரி செல்சிஸ் பதிவானதும் குறிப்பிடத்தக்கது. படிம எரிபொருள் எரிப்பு, வாகன பயன்பாடு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசு கலந்த புகை காற்று மாசுபாடு அடைய முக்கிய காரணம். 

காற்று மாசால் ஏற்படும் விளைவுகள் 

காற்று மாசு  நேரடியாகவும், மறைமுகமாகவும், உயிரினங்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. மனிதர்களிடம் சுவாசக் கோளாறு, இதய நோய்,புற்று நோய் மற்றும் தோல் நோய்களைத் தோற்றுவிக்கின்றன. மேலும் மாசடைந்த காற்றானது குழந்தைகளில் நிமோனியா மற்றும் ஆஸ்துமாவினைத் தோற்றுவிக்கின்றன.

காற்று மாசுவே உலக வெப்ப மயமாதலுக்கு முக்கியக் காரணமாகும். இதை கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறைக்கும், காற்று மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமையும், தேவையும் அதிகரித்துள்ளது. சிறு வயது முதலே காற்று மாசு குறித்து குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுமானால், அதனால் ஏற்படும் நன்மைகள் அவர்களுக்கும், அவர்களின் தலைமுறைக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காணொளி குழந்தைகளுக்கு காற்று மாசு என்றால் என்ன, அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்குகிறது. 

காற்று மாசுபடுதலை  குறைக்க மேற்கொள்ள  நாம் செய்ய வேண்டியது 

  1. பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துதல். அதாவது, கார், பைக் போன்றவற்றை குறைத்து பேருந்து, தொடர்வண்டி ஆகியவற்றை பயன்படுத்தல் வேண்டும்.
  2. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த குழந்தைகளுக்கு கற்றுத்தருவது அவசியமானது. தேவையான இடங்களில் மட்டுமே மின்விளக்கு, மின்விசிறி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். 
  3. மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு. குப்பைகளை எரிப்பதால் நிலம் மற்றும் காற்று மாசடைகிறது. இதனை தவிர்க்க பொருட்களின் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு பற்றிய விழிப்புணர்வு அவசியம். 
  4. மேலும் சூரிய சக்தி குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஏற்படுத்த வேண்டும். 
  5. காற்று மாசுவை  குறைக்க  அனைவருக்கும் பங்கு உள்ளது. இந்த முயற்சியில், குழந்தைகளையும், பங்கெடுக்க செய்வதன் மூலமாக மாசில்லா உலகை நோக்கிய நம்முடைய பயணம் எளிதாகும்.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.