சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை சேலம் தர்மபுரி ஆகிய இடங்களிலும் தெலுங்கானா மாநிலத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தர்மபுரியில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

குறிப்பாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் மற்றும் அவரது உறவினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது

தர்மபுரி பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சருமான கேபி.அன்பழகன் மீது சொத்துக்குவிப்பு வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்துள்ளனர். அவர்மீது மட்டுமின்றி அவரது மனைவி மல்லிகா மகன்கள் சசிமோகன் சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

image

குறிப்பாக கேபி.அன்பழகன் பெயரில் மட்டுமல்லாது மனைவி மகன் மருமகள் பெயரிலும் இந்த சொத்துக்கள் குவிக்கப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளர். இதுபோன்று முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் தனது பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் தமிழ்நாடு மட்டுமல்லாது சுற்றியுள்ள மாநிலங்களிலும் சொத்துக்களை குவித்து வைத்திருப்பதாக ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அரசுப் பதவியை தவறாக பயன்படுத்தி சொத்துக்களை தன் பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் குவித்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.