கோவிட் பெருந்தொற்று காரணமாக உலகெங்கும் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வந்தன. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளே அடைந்துகிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த ஊரடங்குகளில் மக்களுக்குச் செலவிடுவதற்கு நிறைய நேரம் இருந்தது. இந்த நேரங்களை மக்கள் பலவழிகளில் செலவழித்தனர். ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு குடும்பம் இந்த ஊரடங்குக் கால நேரங்களைப் பயன்படுத்தி முழு விமானத்தையே உருவாக்கியிருக்கிறது.

அசோக் (38), அவரது மனைவி அபிலாஷா துபே (35), தாரா (6), மற்றும் தியா (3) எனும் இரண்டு குழந்தைகள் கொண்ட இக்குடும்பம் இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த குடும்பமாகும். ஒரு சொந்த விமானம் வாங்குவது இவர்களின் கனவாக இருந்தது. எனவே இவர்கள் நான்கு பேரும் இணைந்து தங்களின் ஊரடங்கு கால நேரங்களைப் பயன்படுத்தி தங்களின் கனவு விமானத்தை தாங்களே உருவாக்கத் திட்டமிட்டனர்.

குழந்தைகள்: தாரா மற்றும் தியா

38 வயதான அசோக் ஒரு பயிற்சிபெற்ற விமானியான இவர் தனது குடும்பத்தின் உதவியுடன் தங்களின் கனவு விமானத்தை உருவாங்கத்தொடங்கினார்.விமானம் செய்வதற்குத் தேவையான கிட் மற்றும் அதன் பாகங்களைத் தானே வாங்கி வெறும் விமானம் கட்டுவதற்கான கையேடுகள் மற்றும் யூடியூப் காணொளிகளின் உதவியுடன் இரண்டே ஆண்டுகளில் முழு விமானத்தையும் உருவாக்கினார்.

Also Read: தோனி ஏலத்தில் வாங்கிய வின்டேஜ் கார்; என்ன ஸ்பெஷல் தெரியுமா?

முழுமையாக கட்டப்பட்ட சிவப்பு மற்றும் வெள்ளி நிறங்களை உள்ளடக்கிய விமானம்

சிவப்பு மற்றும் வெள்ளி நிறங்களை உள்ளடக்கிய இவ்விமானத்தை உருவாக்குவதற்கு இந்திய மதிப்பில் மொத்தம் ரூ 1.57 கோடி(£140,000) செலவானதாகக் கூறப்படுகிறது. இவ்விமானத்தில் இந்த குடும்பம் இப்போது கோடை விடுமுறைக்குப் பயணம் செல்ல தயாராவதாகவும் அதே நேரத்தில் அசோக் இவ்விமானத்தை மான்செஸ்டர் யுனைடெட் போட்டிகளுக்கு அனுப்பப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.