அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ராக்கி’ படத்தை நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தியேட்டருக்குச் சென்றுப் பார்த்துள்ளனர்.

நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் வழங்கிய ‘ராக்கி’ கடந்த 23 ஆம் தேதி வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. இப்படத்தை, அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ’ராக்கி’ வெளியாவதற்கு முன்பே செல்வராகவனின் ‘சாணிக்காயிதம்’ படத்தையும் இயக்கியதோடு தனுஷ் படத்தை இயக்கவும் ஒப்பந்தமானார் அருண் மாதேஸ்வரன்.

image

விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை ‘ராக்கி’யால் குவிக்கமுடியவில்லை. இந்த நிலையில், ’ராக்கி’ படத்தை தங்கள் ரெளடி பிக்சர்ஸ் சார்பாக வழங்கியுள்ள விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் எஸ்கேப் சினிமாஸில் ‘ராக்கி’ படத்தை பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

image

தங்கள் ரெளடி பிக்சர்ஸ் சார்பாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘கூழாங்கல்’, கவின் நடிக்கும் ’ஊர்குருவி’, நயன்தாரா நடிக்கும் ‘கனெக்ட்’ உள்ளிட்டப் படங்களையும் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.