சீனாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவெ. சீனாவின் முன்னாள் vice premier ஜென் ஜெயலாய் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக சீன சமூக வலைதளத்தில் பதிவிட்டார். பொதுவெளியில் சொன்ன பிறகு அவர் எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பது பற்றி யாருக்கும் தெரியாததால், அவர் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.

ஒரு முக்கிய அரசியல் பிரமுகர்மீது பாலியல் புகார் தெரிவித்த டென்னிஸ் வீராங்கனையைக் காணவில்லை என்ற செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘நான் பத்திரமாக இருக்கிறேன்’ என்று பெண்கள் டென்னிஸை நிர்வகிக்கும் WTA அமைப்புக்கு ஷூவே மெயில் செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அது நம்பும்படி இல்லை என்று தெரிவித்த WTA, சீனாவிடம் அவர் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பியது. அது கிடைக்காததால், சீனாவில் நடக்கவிருந்த டென்னிஸ் தொடர்களை ரத்து செய்வதாக அறிவித்தது.

Peng Shuai

இந்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை சீனாவில் நடந்ததை ஒட்டி சீனாவில் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை ‘டிப்ளமேட்டிக் பாய்காட்’ செய்வதாக அறிவித்திருக்கிறது அமெரிக்கா. டிப்ளமேட்டிக் பாய்காட் என்றால் அதிகாரிகள் இல்லாமல் வீரர்கள் மட்டும் கலந்து கொள்வது.

2022 குளிர்கால ஒலிம்பிக் தொடர் பிப்ரவரி 4-ம் தேதி முதல் பீஜிங் நகரில் தொடங்குகிறது. இப்போது, அமெரிக்காவின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் டிப்ளமேட்டிக் பாய்காட் அறிவித்தது.

இக்காரணங்களினால் பல எதிர்ப்புகளையும் புறகணிப்புகளையும் சீனா சந்தித்துள்ளது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தையும் முதலீடுகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஒலிம்பிக்கால் சீனாவிற்கு ஏற்பட இருக்கும் வருவாயிற்கு சறுக்கல் ஏற்படும். சுற்றுலா துறையும் கடுமையாக பாதிப்படையும். இதனால் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள உள்நாட்டு வியாபரிகளின் வருமானமும் மந்தமாகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.