சி.இ. இன்போ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான பிராண்ட், மேப் மை இந்தியா. இந்தியாவில் வரைபட சேவைகளில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் 98.5% சாலைகளைக் கவரும் விதமாக இந்த நிறுவனம் வரைபடங்களை அமைத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ நாளை டிசம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. பொதுவெளியில் பங்குகளை வெளியிடுவதன் மூலம் மட்டும் ரூ.1039.6 கோடியைத் திரட்டவிருக்கிறது இந்நிறுவனம்.

ஐ.பி.ஓ

Also Read: Medplus IPO: 13-ம் தேதி தொடங்கவுள்ள மெட்ப்ளஸ் ஐ.பி.ஓ; வரவேற்பை பெறுமா?

ஒரு பங்கின் விலை ரூ.1000 முதல் 1033 வரை என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு லாட் (lot) அளவு 14 பங்குகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 14 பங்குகளாவது வாங்கத் தயாராக இருக்க வேண்டும்.

அதாவது, குறைந்தபட்சம் ரூ.14,462 இருந்தால் மட்டுமே ஒரு லாட் (14 பங்குகள்) வாங்க முடியும். இப்படி அதிகபட்சமாக ஒரு தனிமனிதன் ரூ.1,88,006-க்கு 13 லாட் பங்குகள் வாங்கலாம்.

குமார் வர்மா மற்றும் ரேஷ்மி வர்மாவால் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் லாபம் 2020-21 நிதியாண்டில் ரூபாய் 59.43 கோடியாக இருக்கிறது. இது சென்ற நிதியாண்டின் லாபமான ரூ.23.19 கோடியை விட அதிகமாகும்.

ஐ.பி.ஓ

Also Read: `ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!’ – RBI அறிவிப்பால் ஏற்றத்தில் பங்குச் சந்தை

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்த நிறுவனத்தின் வருவாய் ரூ.55 கோடிகளிலிருந்து ரூ.100.03 கோடியாக உயர்ந்துள்ளது.

ஸொமேட்டோ மற்றும் பேடிஎம் போன்றவையோடு ஒப்பிடும் போது, நல்ல லாபத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது மேப் மை இந்தியா. இந்த ஐ.பி.ஓ வரும் டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 13-ம் முடியவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.