கஞ்சா பயிரிட்டதற்காக கைது செய்யப்படுகிற நபர்கள் குறித்து அடிக்கடி செய்திகளில் கேள்விப்படுகிறோம். சிலர் தெரிந்து வளர்ப்பார்கள். இன்னும் சிலருக்கு வளர்வது கஞ்சா என்றே தெரியாமலும் இருக்கும். இவர்கள் இருவருக்கும் சட்டம் ஒரே மாதிரியான தண்டனைகளைக் கொடுக்குமா?

விளக்குகிறார் ஐ.ஆர்.எஸ் அதிகாரியும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வரும் வெங்கடேஷ் பாபு.

Jail (Representational Image)

Also Read: மருத்துவ மாணவர்களையும் பாதிக்கும் போதை மருந்துகள்; அதிர்ச்சி யதார்த்தம்! – நான் அடிமை இல்லை – 10

“மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி போன்ற மருந்துகளை போதைக்காக சில மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். அதுபோன்ற மருந்துகளை இருப்பு வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் தனிநபர் பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச அளவைத்தான் கையில் வைத்திருப்பார்கள்.

ஆனால் மருத்துவமனை பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருக்கும் வலி நிவாரணிகளை வியாபார நோக்கில் வெளியில் விற்பனை செய்யும் செயல்களும் ஆங்காங்கே நடைபெறத்தான் செய்கின்றன. இந்த மருந்துகளை பிளாக் மார்கெட்டில் விற்பனை செய்தால் அதிக பணம் கிடைக்கும். நோயாளிகளுக்குக் கொடுத்ததாக ஆவணங்களில் கணக்கு காண்பித்துவிட்டு, வெளியே விற்பனை செய்யும் குற்றங்களும் நடைபெறத்தான் செய்கின்றன.

Narcotic Drugs

மருந்தைத் திருட்டுத்தனமாக வெளியில் விற்பனை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி தண்டனை வழங்கப்படும். அதே சமயம் போதைப்பொருளுக்கு அடிமையாகி, தனிநபர் பயன்பாட்டுக்கான அளவை வைத்திருந்து நிரூபிக்கப்பட்டால் மறுவாழ்வு சிகிச்சை பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

கஞ்சா செடி பயிரிடுதல்

கஞ்சா செடிகளைப் பயிரிடுபவர்களுக்கு Narcotics Drugs and Psychotropic Substances act 1985 (NDPS Act) சட்டத்தின்படி அதனைப் பயன்படுத்துபவர்கள், விற்பனை செய்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனைதான் வழங்கப்படும். தெரிந்து வளர்ப்பவர்கள், தெரியாமல் வளர்ப்பவர்கள் என்ற பாகுபாடெல்லாம் சட்டத்துக்கு கிடையாது. வளர்ப்பது தெரியவந்தால் தண்டனை வழங்க வேண்டும் என்றுதான் சட்டம் சொல்கிறது. பொதுவாக விவசாய நிலங்களில் அது கஞ்சா செடிதான் என்பது தெரியாமல் தானாக வளர வாய்ப்புள்ளது.

IRS officer Venkatesh Babu

விவசாய நிலங்களில் சாகுபடி செய்வதுபோன்ற நேர்த்தியுடன் இல்லாமல் காட்டுத்தனமாக வளர்ந்திருக்கிறது என்பதாக அதிகாரிகள் உணர்ந்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யமாட்டார்கள். அந்தச் செடிகளை உடனடியாக அகற்றி, அழித்துவிட்டு அவர்களுக்கு எச்சரிக்கை செய்து அறிவுறுத்துவார்கள். மீண்டும் மீண்டும் வளர்ப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு சட்டத்தின் கீழ் தண்டனை உண்டு. வீடுகளில் தெரியாமல் வளர்வதற்கு வாய்ப்பில்லை. ஒருவர் அதைத் திட்டமிட்டு வளர்த்தால்தான் வளரும். அதனால் வீடுகளில் செடி வளர்ப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சட்டத்தின் கீழ் ஒரே தண்டனைதான்.

கஞ்சா பயிரிடுதலில் மாற்றம்!

கஞ்சா பயிரிடுதலில் இந்தியாவிலேயே சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. உத்தராகண்ட் மாநிலத்தில் கஞ்சா செடி பயிரிடுவதற்கு அதிகாரபூர்வமாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலம் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி இருப்பதாலும், பொருளாதாரத் தேவையை முன்னிட்டும் அதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டுக்காக அல்ல, சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் தயாரிப்பதற்காக கஞ்சா பயிரிட அங்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Narcotic Drugs

Also Read: சிறுவன் செய்த அடுத்தடுத்த கொலைகள்; போதையால் நிகழ்ந்த துயரம்! – நான் அடிமை இல்லை – 19

உத்தரகாண்டைத் தொடர்ந்து இமாச்சல் பிரதேசத்திலும் கஞ்சாவை மருத்துவ தேவைக்காகப் பயிரிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில நாள்களில் அதனை அமல்படுத்தவுள்ளதாகவும் தெரிகிறது. கஞ்சா செடி பயிரிடுதல் என்பது NDPS Act மற்றும் அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் வரும். உதாரணத்துக்கு, மதுவுக்கு தமிழகத்தில் தடை இல்லை. ஆனால் வேறு மாநிலங்களில் தடை விதிக்கலாம். அதே போன்று கஞ்சா பயிரிடுவது தொடர்பான விதிமுறைகள் அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாடுகளுக்கேற்ப மாறலாம்.

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான குற்றங்கள் குறைய இன்னும் சட்டத்தில் எவையெல்லாம் கடுமையாக்கப்பட வேண்டும்…. மீண்ட பிறகும் ஒரு நபர் மறுபடி போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது ஏன்…? அடுத்த அத்தியாயத்தில்..!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.