கடலில் மூழ்குவதை தடுக்க, தூத்துக்குடியில் பனைமரங்கள் வளர்ப்பதை பிரதமர் நரேந்திரமோடி தனது மன்கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார். பனைமரம் வளர்க்க தூத்துக்குடி வான் தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி என்ன?

தூத்துக்குடியில் மணல் திட்டுகள் கடலில் மூழ்கும் நிலை உள்ளதால் அந்த மணல் திட்டுகளில் பனைமரங்களை நட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த மரங்கள் புயல் மற்றும் சூறாவளியில் நிமிர்த்து நிற்பவை. இந்த பகுதியை பாதுகாப்பதில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தனது மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேசியிருந்தார்.

image

பிரதமர் மோடி குறிப்பிட்ட மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ள வான்தீவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் அரிப்பின் காரணமாக 2.4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த கடற்பரப்பு 1.5 கிலோ மீட்டராக சுருங்கியது. இதையடுத்து, இங்கு கடல் அரிப்பை தடுக்கவும், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களை மீட்டெடுக்கவும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை முனைப்பு காட்டியது.

இதன்படி, இங்கு பனை விதை தூவுதல், மரக்கன்று நடுதல் என வான்தீவை சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் தூவப்பட்டன. அதன்பயனாக பனை விதைகள் முளைவிட்டு வளரத் தொடங்கியுள்ளன.

image

மத்திய, மாநில அரசுகள், வனத்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் முயற்சியின் காரணமாக வான்தீவில் பவளப்பாறைகளின் வளர்ச்சியும் சீராக உயர்ந்துள்ளது. விளைவு தீவின் பரப்பளவு மீண்டும் 2 கிலோமீட்டராக நீட்சி அடைந்துள்ளது.

image

தூத்துக்குடியில் உள்ள தீவுகளை பாதுகாக்க அரசால் எடுக்கப்பட்ட முயற்சிக்கு கிடைத்துள்ள பலனை அடுத்து, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை எடுத்த பனை வளர்ப்பு முயற்சியும் கைமேல் பலன் தந்திருப்பது பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.

இதனைப்படிக்க…ஓசூரில் ரூ.2.21 கோடி பறிமுதல்; பெண் பொறியாளர் கைது 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.