முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் நடித்துள்ளதுள்ளேன் என Bachelor திரைப்படம் குறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

புதுமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் ஜி.வி.பிரகாஷ், புதுமுக நடிகை திவ்யபாரதி உள்ளிட்டோர் நடித்துள்ள Bachelor படக் குழுவின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது.

image

இதில் பேசிய நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், Bachelor திரைப்படம் பெயருக்கு ஏற்றாற்போல் பெரும்பாலான இளவட்ட, புதுமுக நட்சத்திரங்களைக் கொண்டு உருவாகியிருப்பதாகவும், இயக்குநர்கள் மணிரத்தினம், செல்வராகவன் படங்கள் போல் புதுமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ள Bachelor படமும் திரைப்படத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தி ஒரு புதிய பாதையை உருவாக்கும் என்றும் பெருமிதம் கொண்டார்.

தனது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்ட நடிப்பை வழங்கியுள்ளதாக பேசிய ஜி.வி.பிரகாஷ், Bachelor படமும் தனது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்ட படமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். படப்பிடிப்பின் போது புதுமுக நாயகி திவ்யபாரதி ஒருவித பதட்டத்துடன் இருந்ததாகவும், தன்னம்பிக்கையுடன் நடிக்குமாறு அறிவுறுத்தியதாகவும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.