கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு கோவையில் துவங்கியிருக்கிறது.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. கடந்த மாத இறுதியில் தாம்பரத்தில் இப்படத்தின் மூன்றாம் கட்டப்படிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது கோவையில் நான்காம் கட்டப் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது.

image

இதில், கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. தொடர்ச்சியாக ஒரு மாதம் கோவையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.