கார்த்திகை மாதத்தின் சிறப்புகளில் ஒன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா. இந்த நாளில் வீடுகளில் தீபங்கள் ஏற்றி வழிபடுவது வழக்கம். வழிபாடுகளில் சிறந்தது தீப வழிபாடு. இறைவன் ஜோதி வடிவானவன். அக இருளை அழித்து உள்ளொளி பெருகச் செய்பவன். அப்படிப்பட்ட இறைவனை தீபமாக நம் வீடுகளில் வழிபடும் வழக்கம் நம் மரபில் உண்டு. சிவபெருமான் அடிமுடி காண முடியாத அக்னிப் பிழம்பாக எழுந்தருளிய தினம் திருக்கார்த்திகை நாள். மேலும் திருக்கார்த்திகை அன்றுதான் ஈசன் தன் உடலில் பாதியை அம்பிகைக்கு வழங்கி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி கொடுத்தார். எனவே அந்த நன்நாளில் வீடுகளில் தீபங்கள் ஏற்றி இறைவனை ஜோதி ரூபமாக வழிபாடு செய்கிறோம்.

Also Read: 2021 குருப்பெயர்ச்சியில் சிறந்த பலன்களைப் பெற என்ன செய்யலாம்? ஸ்ரீகும்ப குரு பெயர்ச்சி மஹாஹோமம்!

மீனாட்சியம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா

தமிழ் மக்களின் வாழ்வியலோடும் வரலாற்றோடும் கலந்தது திருக்கார்த்திகை. இந்த விழாவை, திருஞானசம்பந்தர் `விளக்கீடு’ என்னும் பெயரால் சுட்டிக்காட்டுகிறார். ‘நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட…’, ‘கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்றனவே….’ ஆகிய வரிகளின் மூலம் திருக்கார்த்திகை அன்று வீடுகளும் தெருக்களும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன என்பதை சங்க இலக்கியங்களின் எடுத்துரைக்கின்றன.

கார்த்திகை மாதத்தில் பெளர்ணமிதிதி, கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வருகிற நாளைதான் நாம் கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடுகின்றோம். கார்த்திகை தீபம் என்றவுடன் நம் அனைவரின் கண்முன்னே வலம்வரும் காட்சி, திருவண்ணாமலை தீபம் என்றால் அது மிகையில்லை.

விழாக்களில் சில திதிகளின் அடிப்படையும் சில நட்சத்திரங்களின் அடிப்படையிலும் கொண்டாடப்படும். திருக்கார்த்திகையைப் பொறுத்தவரை இரண்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது. கார்த்திகை மாதப் பௌர்ணமி திதி தினத்திலும் கார்த்திகை நட்சத்திர தினத்திலும் இந்த விழா கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வாலய தீபம் எனப்படும் அனைத்து ஆலயங்களிலும் திருக்கார்த்திகை பௌர்ணமியை அடிப்படையாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படும். திருவண்ணாமலையில் மட்டும் நட்சத்திரமான கார்த்திகையை அடிப்படையாகக் கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு

நாளை (18.11.21) பௌர்ணமி திதி அன்று சர்வாலய தீபமும் நாளை மறுநாள் கார்த்திகை நட்சத்திர நாளில் (19.11.21) திருவண்ணாமலை தீபமும் கொண்டாடப்பட இருக்கிறது. பரணி தீபம் என்பது திருவண்ணாமலையில் கொண்டாடப்படுவதுதான். அது தீபத் திருநாளின் அதிகாலையில் கடைப்பிடிக்கப்படும்.

சிலர் சர்வாலய தீபத்தின் போதும் சிலர் அண்ணாமலையார் தீபத்தின் போதும் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். கூடுமானவரை நாளை, நாளை மறு நாள் ஆகிய இரண்டு தினங்களிலுமே விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. வீட்டின் அனைத்து அறைகளிலும் மாலை வேளையில் விளக்கேற்றி வைக்கவேண்டும். 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 விளக்குகள் ஏற்றுவது சிறந்தது. இயலாதவர்கள் குறைந்தபட்சம் வீட்டில் பூஜை அறை அல்லது சுவாமி படம் இருக்கும் இடத்தில் மூன்று தீபங்களாவது ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

மேலும் திருக்கார்த்திகையின் சிறப்புகளையும் வீட்டில் வழிபாடு செய்ய வேண்டிய முறையையும் அறிந்துகொள்ள மேலே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.