விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படத்திற்கான திரையரங்குகள் கிடைத்து வருகின்றன என திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தை வினோத் என்பவர் தயாரித்திருக்கிறார். தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த திரைப்படத்திற்கு சில நாட்களுக்கு முன்பு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் உள்ளது என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, தமிழகத்தின் பல வினியோக பகுதிகளில் எனிமி திரைப்படத்திற்கு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன என திரைத்துறையினர் கூறுகின்றனர். அதேபோல் இன்னும் சில ஏரியாக்களில் மட்டும் திரையரங்குகளை எனிமி திரைப்படத்திற்கு இறுதி செய்ய வேண்டியுள்ளது. அந்த வேலைகளும் திங்கட்கிழமை முடிந்துவிடும் என தெரிவிக்கின்றனர்.

image

இதனால் எனிமி திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகிறது. இந்த படம் தமிழகம் தவிர தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களிலும் வெளியாகிறது. அதேபோல் ஹிந்தியில் ஒரு வாரத்திற்குப் பிறகு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

– செந்தில்ராஜா 

பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு அபராதம்: சென்னை மாநகராட்சி  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.