தீபாவளி பண்டிகையையொட்டி கடைசி நேர ஷாப்பிங்; குவிந்த மக்கள்!

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகமெங்கும் ஷாப்பிங் செய்ய அதிக அளவு மக்கள் கடைகளில் குவிந்தனர்.

ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்

ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

கடந்த 28-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ரஜினிகாந்த் சில நாள்களில் வீடு திரும்புவார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழகத்தில் பரவலாகப் பெய்த கனமழை!

கனமழை

வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. நேற்று, சிவகங்கை, வேதாராண்யம், புதுக்கோட்டை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருக்கிறது. தொடர் மழையால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடனா நதி அணை நிரம்பியது. இன்று காலை சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்திருக்கிறது. கோவை, மதுரை, நெல்லை, புதுவையிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.