”இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில்,

”இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுப்படுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை” என்று கூறியுள்ளார்.

image

இதற்கு முன்னதாக, தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்பவர், சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் சொமேட்டோவின் வாடிக்கையாளர் மையத்தை அணுகி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது மொழி பிரச்னை இருப்பதாக சொமோட்டோ நிறுவனம் கூற , தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்தி இருக்க வேண்டும் என விகாஷ் கூறியுள்ளார். அதற்கு இந்தி நாட்டின் தேசிய மொழி. இந்தியர்கள் அனைவரும் இந்தி மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என சொமேட்டோ நிறுவனம் பதில் அளித்துள்ளது.

image

இதனை படமாக எடுத்து விகாஷ் சமூகவலைதளங்களில் பதிவிட, சொமேட்டோவின் செயலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.