பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்.

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் சென்னையில் காலமானார். அவருக்கு தற்போது வயது 65. இதுவரை 400 க்கும் மேற்பட்டப் படங்களில் 1400 பாடல்களை எழுதியுள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். செம்பருத்தி படத்தில் ‘நடந்தால் இரண்டடி’ என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடியவர் பிறைசூடன். அதேபோல் பொங்கி வரும் காவேரி படத்தில் எல்லோரையும் உருக்கிய பாடலான மன்னவன் பாடும் பாடலை இவர்தான் எழுதியுள்ளார்.

ராஜாதி ராஜா படத்தில் மீனம்மா.. மீனம்மா, மாப்பிள்ளை படத்தில் வேறு வேளை உனக்கு இல்லையே, பணக்காரன் படத்தில் சைலன்ஸ் இது காதல் செய்யும் நேரம் இது, அரங்கேற்றவேளை படத்தில் குண்டு ஒன்று வச்சிருக்கேன், அதிசய பிறவி படத்தில் தானந்த கும்மி கொட்டி, கோபுர வாசலிலே படத்தில் காதல் கவிதைகள் எழுதிடும் நேரம், இதயமே படத்தில் இதயமே.. இதயமே, கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா, அமரன் படத்தில் வெத்தல போட்ட சோக்குல, சந்திரனே சூரியனே, தங்க மனசுக்காரன் படத்தில் மணிக்குயில் இசைக்குதடி, செம்பருத்தி படத்தில் கடலில எழும்புற அலைகள கேளடியோ, உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் படத்தில் என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் யாரடி உள்ளிட்ட முக்கியமான பாடங்களை எழுதியுள்ளார்.

புதிய தலைமுறைக்கு அவர் அண்மையில் அளித்த பேட்டி:

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.