கோவிந்தராசுவை சித்ரவதை செய்து மதுவில் விஷம் கலந்து கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றி கொலை செய்ததாக பரபரப்புத் தகவல்கள் வெளியான நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவர் பணிக்கன் குப்பத்தில் உள்ள கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 19-ம் தேதி வேலைக்கு சென்ற கோவிந்தராசு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும், அவரது மகனுக்கு தொழிற்சாலையில் இருந்து போன் மூலம் தெரிவித்துள்ளனர்.

image

இதையடுத்து அவரது உறவினர்களோடு மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது அவர் உடலில் பல காயங்கள் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் எம்.பி ரமேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்கமாட்டோம் என காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த கோவிந்தராசுவின் உடலை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இந்த வழக்கு கடந்த 27ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. காடாம்புலியூர் காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்ததை சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். கடந்த 19-ஆம் தேதி கோவிந்தராசுவை அடித்து, காடாம்புலியூர் காவல் நிலையத்தில் அவர் மீது திருட்டு புகார் கொடுத்துள்ளனர்

அவர் உடல் முழுவதும் படுகாயங்கள் இருந்ததால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நபரையே, நீங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுங்கள் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். அப்போது கோவிந்தராசு தன்னை கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் கடுமையாக தாக்கியதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

image

இதனால் கோவிந்தராசுவை அழைத்து வந்தார்கள், நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு நீங்கள் அடித்ததாக இவர் காவல் நிலையத்தில் தெரிவித்ததாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த எம்பி.ரமேஷ் அவரை மீண்டும் தொழிற்சாலைக்கு வரவைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு அவருடன் 5 பேர் சேர்ந்து மதுவில் விஷம் கலந்து கோவிந்தராசுவை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றி கொலை செய்ததாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை உறுதி செய்த சிபிசிஐடி போலீசார், காடாம்புலியூர் காவல் நிலைய போலீசார் சந்தேக மரணமாக பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர். இதனையடுத்து கந்தவேல், நடராஜ், அல்லாபிச்சை, சுந்தர், வினோத் ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் நேற்று இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

சிபிசிஐடி போலீசார் விரைவில் ரமேஷை கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் ஒருசில சட்ட விதிகளை பின்பற்றி கைது நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.