மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாக ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஜினி, “எஸ்பிபி எனக்கு பாடும் கடைசி பாடல் இதுதான் என நான் கனவில் கூட நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

Rajinikanth mourns SPB death: RIP SP Balasubrahmanyam Sir, you have been my  voice, I will truly miss you - Movies News

இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


இப்பாடல் வழக்கமான ரஜினி பாடலுக்கே உரித்தான வகையில் ஸ்டைலாக மாஸாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனாலேயே என்னவோ பாடலிலேயே ‘அண்ணாத்த மாஸூக்கே பாஸூ’ என்று வரியும் வைத்துவிட்டார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.