மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும்  அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மணல் கொள்ளையர் மீது குண்டர் சட்டம் பாயும்

இதுபற்றி மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரிடம் பேசினோம்.

“தற்போது மொத்தம் 276 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையங்களில் வழக்குச் சொத்தாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 154 நான்கு சக்கர வாகனங்களும், 77 பொக்கலைன் இயந்திரங்கள், மாட்டு வண்டிகளும் அடங்கும். இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டு கைது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.  மேலும் ஒரு நபர் மீது இதுபோன்ற தொடர் மணல் திருட்டுப் புகார் வரும் பட்சத்தில் அவர்மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் தங்கள் ஊர்களில் மணல் திருட்டு நடைபெறுவது பற்றிய தகவல்களை 9442626792 என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாகவோ அல்லது வாட்ஸ்-அப் மூலமாகவோ 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்  எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள.

Also Read: `கல்லணை தலைப்பிலேயே மணல் திருட்டு; துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்!’ -குமுறும் விவசாயிகள்

மயிலாடுதுறை

அவர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்லாமல் உடனடியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது மணல் திருட்டு வாகனங்களைக் கண்டறிய சம்பந்தப்பட்ட பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.