திரைப்பட தொழிலாளர்களுக்காக முன்னனி நடிகர்கள்‌‌‌‌‌‌‌‌‌‌ வருடத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் கால்ஷீட் ஒதுக்க வேண்டும் என பெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் வைத்துள்ளார்.
 
முன்னனி நடிகர்கள் 4 அல்லது 5 நாள்கள் கால்ஷீட் வழங்கினால் அதைப் பயன்படுத்தி பெப்சி அமைப்பிற்காக ஒரு திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ள ஆர்.கே.செல்வமணி, அதன் மூலம் பெரிய தொகை மூலம் திரைப்பட தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியிடம் 7 நாள்கள் கால்சீட் கேட்டு சென்றதாகவும், ஆனால் அதில் சிக்கல் இருப்பதால் ஒரு கோடி ரூபாயை அவர் கொடையாக பெஃப்சி அமைப்பிற்கு வழங்கியுள்ளதாகவும் செல்வமணி கூறியுள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.