டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரான கவுரவ் குலாட்டி, தனது வழக்கறிஞர் கவுனுக்குள் வைத்திருந்த ஒன்பிளஸ் நார்ட் 2 போன், திடீரென வெடித்ததாக குற்றம் சுமத்தி இருந்தார். அதோடு அது தொடர்பான தகவலை சமூக வலைத்தளமான ட்விட்டர் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். 


இந்நிலையில் வழக்கறிஞர் தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் தவறான நோக்கத்துடன் இதை செய்துள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு அவருக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றையும் அந்நிறுவனம் அனுப்பியுள்ளது. 

அதில் வழக்கறிஞர் கவுரவ் குலாட்டி இதற்கு முன்னர் பகிர்ந்துள்ள ‘ஒன்பிளஸ்’ போன் குறித்த அனைத்து ட்வீட்டுகளையும் நீக்க வேண்டும். இதோடு இதை நிறுத்தி கொள்ளுங்கள் எனவும். அவதூறு பரப்பும் வீடியோ மற்றும் அறிக்கைகளை இனி பகிரக் கூடாது எனவும். மேலும் அவர் எழுத்து பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும் என தனது நோட்டீஸில் ஒன்பிளஸ் குறிப்பிட்டுள்ளது. 

“ஒரு தவறை சுட்டிக்காட்டியமைக்கு எனக்கு கிடைத்த பரிசு இது” என சொல்லி தனக்கு அந்த நோட்டீஸை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார் வழக்கறிஞர் கவுரவ்.

இதையும் படிக்கலாம் : ‘கேப்டன்சி பதவி’ கோலி தானாக முடிவு எடுக்கிறாரா.. சூழலின் அழுத்தம் காரணமா?- என்ன நடக்கிறது? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.