தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் மாதம் 4 லட்சம் சம்பாதிப்பதாகக் கூறியிருக்கிறார், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. பல்கலைக்கழகத்துக்கான பாடங்களை எடுத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி இந்த 4 லட்ச ரூபாயைச் சம்பாதிக்கிறார் இவர்.

இதென்ன பிரமாதம், நம்மூரில் சில டிவி பிரபலங்களே தங்களுடைய யூடியூப் சேனல்கள் மூலம் இதை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்கிறார்கள், விவரமறிந்தவர்கள்.

‘இவங்கெல்லாம் டிவி மூலம் சம்பாதிப்பதைக் காட்டிலும் யூடியூப் சேனல் மூலமாத்தன் அதிகம் வருமானம் ஈட்டுறாங்க’ என டிவி ஏரியா கைகாட்டுவதில் முதல் இரண்டு இடத்தில் ஆங்கர் பிரியங்காவும் மணிமேகலையும்தான் இருக்கிறார்கள்.

பிரியங்கா

இருவருமே நிதின் கட்கரி சம்பாதிப்பதை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

“பிரியங்கா சுமாரா மாதம் ஏழு லட்சம் வரை சம்பாதிக்கறாங்க” என்கிறார்கள்.

மணிமேகலை ஒரு லட்சம் குறைவாக அதாவது 6 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறாராம்.

‘ஆத்தாடி’ என வாய் பிளக்காமல் பிரியங்கா தேஷ்பாண்டேவின் யூடியூப் பக்கம் போனால், அவரால் எப்படிச் சம்பாதிக்க முடிகிறது எனத் தெரிந்து கொள்ளலாம்.

Also Read: சர்வைவர் – 7 | ராம் என்கிற பெயருக்கும் பாலத்துக்கும் ராசியே இல்ல போல… ஆண்களும், சில அலப்பறைகளும்!

“ஆமாங்க, ஒண்ணுமில்ல, வீட்டுல டிபன்னுக்கு சப்பாத்தி செஞ்சா அதுக்கு மாவு பிசையறதுல தொடங்கி, உருண்டை உருட்டி அதைத் தேய்ச்சு கல்லுல போட்டு எடுத்து தட்டுல பரிமாறி பிய்ச்சு சாப்பிடற வரைக்கும் காட்டாம விட மாட்டாங்க.

அவங்களுக்கு கண்டதெல்லாம் கன்டென்டுதான். ஏன் சமீபத்துல உடல் நலன் சரியில்லைனு ஆஸ்பத்திரியில போய் அட்மிட் ஆனப்ப அங்கிருந்தே வீடியோ போட்டாங்கதானே… அதுக்கு ஏழு லட்சம் தாராளமா கிடைக்கும்’ எனக் கொஞ்சம் காதில் புகையுடனே விவரம் கூறுகிறார்கள், அவரை நன்கு தெரிந்த சிலரே.

மணிமேகலை

ஆங்கர் மணிமேகலையோ கன்டென்டுக்காகக் கொஞ்சம் மெனக்கெடுகிறார். தன்னுடைய கணவரையும் கூட்டிக் கொண்டு வித்தியாசமான இடங்கள், மனிதர்களைத் தேடிச் சென்று வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார் மணி.

இவர்கள் இருவர் தவிர, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதா, ‘செம்பருத்தி’ லக்ஷ்மி, பரதா நாயுடு, ‘கில்லி’ ஜெனிஃபர், ஆகியோரும் யூடியூப் சேனல் மூலம் கணிசமாகக் காசு பார்க்கிறார்களாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.