கம்யூட்டர் செக்மன்டில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள பைக் எதுவும் சமீப காலமாக டிவிஎஸ்ஸில் இல்லை, முக்கியமாக 125 சிசி செக்மன்டில். அந்தக் குறையைப் போக்குவதற்காக ரெய்டர் 125 (Raider 125) என்னும் புதிய பைக்கை இன்று வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ். ஜென் ஸி (Gen Z) தலைமுறையைக் கவர்வதற்காகவே இந்த பைக்கை கொண்டுவந்திருக்கிறோம் எனக் கூறுகிறது டிவிஎஸ். புதிய ரெய்டர் 125-ல் என்ன ஸ்பெஷல்?

ரெய்டர் 125-யை டெஸ்ட் ட்ரைவ் செய்வதற்கான வாய்ப்பு மோட்டார் விகடனுக்குக் கிடைத்தது. முழுமையான பர்ஸ்ட் ட்ரைவ் வீடியோவைக் காண கீழே க்ளிக் செய்யுங்கள்..

Raider 125

சிறப்பம்சங்கள்:

ஸ்போர்டி கம்யூட்டர் என்ற அடிப்படையில் தான் இந்த புதிய பைக்கை உருவாக்கியிருக்கிறது டிவிஎஸ். ஸ்போர்டியாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலும் இருக்க வேண்டும் என இந்த பைக்கை டிசைன் செய்திருக்கிறது. டிவிஎஸ் கூறுவது போலவே இரண்டுக்கும் இடைப்பட்டுத்தான் நிற்கிறது இதன் டிசைன். ரெய்டரைக் கம்யூட்டராகப் பார்த்தால் கம்யூட்டர், ஸ்போர்டியாகப் பார்த்தால் ஸ்போர்டி பைக். 11.4 bhp பவர் மற்றும் 11.3 Nm டார்க்கை வெளிப்படுத்தும் 124.8 சிசி இன்ஜினைப் பெற்றிருக்கிறது ரெய்டர் 125. புதிதாக Eco Mode மற்றும் Power Mode என இரண்டு மோஃட்களை கொடுத்திருக்கிறது டிவிஎஸ். Eco Mode-ல் அதிகபட்சமாக 67 – 70 கிமீ மைலேஜ் வரை கிடைக்கும் எனத் தெரிவித்திருக்கிறது டிவிஎஸ்.

Also Read: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் டிவிஎஸ் 1000 கோடி முதலீடு… விற்பனைக்கு வரும் க்ரியான்!

Raider 125
Raider 125

780 மிமீ சீட் உயரம், 180 மிமீ க்ரௌண்ட் கிளியரன்ஸ் மற்றும் 123 கிலோ எடையுடன் இருக்கிறது ரெய்டர். 10 லிட்டர் ப்யூல் டேங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமன்ட் கிளஸ்டரைப் பெறுகிறது ரெய்டர் 125. பில்லியன் சீட்டுக்கு அடியில் கொஞ்சம் ஸ்டோரேஜ் ஸ்பேஸும் இருக்கிறது. தற்போது ப்ளூடூத் கனெக்டிவிட்டி இல்லாத மாடலைத் தான் வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ். இன்னும் சில் மாதங்களில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, வாய்ல் அஸிஸ்டன்ஸ் மற்றும் TFT டிஸ்ப்ளேவுடன் கூடிய ஹை-எண்ட் மாடலையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.

விலை:

77,500 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கும் ரெய்டர் 125, போட்டியாளர்களை சமாளித்து நிலைத்து நிற்குமா?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.