மொபைல் மட்டுமல்லாமல் அனைத்து விதமான கேட்ஜெட்ஸ் தயாரிப்பிலும் முன்னனி நிறுவனமாக வளர்ந்து வருகிறது ஷாவ்மி. அன்றாட பயன்பாட்டுக்குத் தேவைப்படும் சாதனங்களுடன் அவ்வப்போது அதிநவீன உயர் ரக கேட்ஜெட்ஸையும் ஷாவ்மி அறிமுகப்படுத்துவது உண்டு. அந்த வரிசையில் தற்போது ஆச்சரியப்பட வைக்கும் வசதிகளை கொண்ட அதி நவீன ஸ்மார்ட் கிளாஸை அறிமுகப்படுத்தியுள்ளது ஷாவ்மி. மார்வெல் படங்களில் அயர்ன்மேன் அணிந்திருப்பாரே… அப்படியான ஒரு கண்ணாடிதான்!

சாதாரண சன் கிளாஸ் போலிருக்கும் இதில் போட்டோ எடுக்க முடியும், தொலைபேசி அழைப்புகள் பேசவும் முடியும், மொழியாக்கம் செய்து தரும், AR மூலம் வழி காட்டும்.

ஷாவ்மியின் ‘ஸ்மார்ட் கிளாஸ்’

சதுர வடிவ ஃப்ரேம்களை கொண்டிருக்கும் இது 51 கிராம் எடை உடையது. டிஸ்ப்ளேவுக்கு microLED WaveGuide தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறது ஷாவ்மி. அரிசி அளவுக்கு மெல்லிய டிஸ்ப்ளே இது என்கிறது ஷாவ்மி. இந்த டிஸ்ப்ளேவுக்கான சிப் அளவு வெறும் 2.4×2.02mm தான். மேலும் இதில் புகைப்படங்கள் எடுக்க 5 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. லைவ்வாக டெக்ஸ்ட்டை டிரான்ஸ்லேஷன் செய்ய இது பயன்படும்.

வாய்ஸ் கமேண்ட் மூலமே இதை இயக்க முடியும். ஷாவ்மியின் சொந்த வாய்ஸ் அசிஸ்டன்ட்டான XiaoAI இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Also Read: தொடர்ந்து பேட்டரி விஷயத்தில் கலக்கும் ஷாவ்மி… ஒலியால் சார்ஜ் செய்யும் டெக்னிக்குக்கும் டார்கெட்!

அடிக்கடி தொந்தரவு தராமல் தேவையான விஷயங்களை மட்டுமே டிஸ்ப்ளே செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்தக் கண்ணாடி. மேப்பை கண்முன்னே காட்டி வழி சொல்லவும் செய்கிறது இந்த கிளாஸ்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் கிளாஸாக வெளியாகும் இதில் ப்ளூடூத், வைஃபை வசதி உண்டு. ஒருவர் பேசுவதை மொழிபெயர்த்து உடனடியாகத் திரையில் காட்டும் வசதியும் இதில் உண்டு. Quad-core ARM processor-ல் இது செயல்படும். இது முதலில் சீனாவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் பேஸ்புக் வெளியிட்ட Ray-Ban Stories ஸ்மார்ட் கிளாஸ்களுக்கு போட்டியாக ஷாவ்மி ஸ்மார்ட் கிளாஸ்கள் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.