சமூக வலைதளங்களில் ’சமந்தா அக்கினேனி’ என்ற தனது பெயரை மாற்றியிருக்கிறார், நடிகை சமந்தா.

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

image

இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார். அதோடு, சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’ என்று மாற்றினார். 

image

இந்த நிலையில், தற்போது சமந்தா அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு வெறும் ‘S’ என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் மாற்றியிருக்கிறார். அதேசமயம், சமந்தாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ‘சமந்தா அக்கினேனி’ என்றுதான் இப்போதுவரை இருக்கிறது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.