கோலாகலாமாக தொடங்கியது ஒலிம்பிக்: உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் கோலாகலமாக தொடங்கியது. 205 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்து 300 பேர் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

நீட் தேர்வு ஒத்திவைப்பில்லை: கொரோனா சூழல் காரணமாக நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படாது என நாடாளுமன்றத்தில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

ஜூலை 28-இல் அதிமுக போராட்டம்: தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு மெத்தனமாக செயல்படுவதாக அதிமுக குற்றச்சாட்டியிருக்கிறது. வரும் 28ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் எனவும் அறிவித்திருக்கிறது.

வங்கி லாக்கரை சோதனையிட திட்டம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வங்கி லாக்கர்களை திறந்து சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்திருக்கிறது. வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அரசு வேலைக்கு காத்திருக்கும் 67.77 லட்சம் பேர்: தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக 67 லட்சத்து 77 ஆயிரம் பேர் பதிவு செய்து காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்திருக்கிறது.

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்திற்கான நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரியில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கனமழையால் மண்சரிவு – அச்சத்தில் மக்கள்: நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரத்தில் 3ஆவது நாளாக கனமழை பெய்துவருகிறது. மண்சரிவுகள் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

உளவு விவகாரத்தில் தேசத் துரோகம்: பிரதமர் மோடியும் அமித் ஷாவும், உளவு ஆயுதத்தை இந்தியர்கள்மீ து பயன்படுத்தியது தேசத் துரோகம் என ராகுல் காந்தி குற்றச்சாட்டியதுடன், உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

அறிக்கையை கிழித்த எம்.பி. இடைநீக்கம்: மாநிலங்களவையில், மத்திய அமைச்சரிடமிருந்து அறிக்கையை பறித்து, கிழித்து எறிந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் இடைநீக்கம் செய்யப்பட்டார். எதிர்க்கட்சிகள் ‌‌தொடர் அமளியால் இரு அவைகளும் மீண்டும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு: மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சித்து பதவியேற்பு – அமரீந்தர் சிங் பங்கேற்பு: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார் நவ்ஜோத் சிங் சித்து. அதிருப்தியில் இருந்த முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும் விழாவில் பங்கேற்றார்.

இந்திய எல்லைப்பகுதிக்கு சீன அதிபர் பயணம்: இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய பகுதிக்கு சீன அதிபர் ஷி ஜிங்பிங் பயணம் மேற்கொண்டார். எல்லை பிரச்னை நீடிக்கும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.