டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க இருக்கிறார். பதக்கத்தை வென்றே தீருவேன் என உறுதியாக கூறும் இவரின் பிண்ணனி என்ன?

‘Home of Wrestling’ என அழைக்கப்படுவதற்கு அத்தனை தகுதியும் உடைய ஹரியானா மாநிலத்தில் நிதானி எனும் கிராமத்தில் பிறந்தவரே அன்ஷு மாலிக். இவருடைய குடும்பம் மல்யுத்த பாரம்பர்யத்தைக் கொண்டது. தாத்தா ஒரு மல்யுத்த வீரர். தந்தை தரம்வீர் மாலிக்கும் ஜுனியர் பிரிவில் தேசிய அளவில் சாதனை படைத்த மல்யுத்த வீரர். ஒரு காயத்தால் அவருடைய தந்தையால் தொடர்ந்து மல்யுத்தத்தில் பங்கேற்க முடியவில்லை. தன்னுடைய குடும்பத்தின் மல்யுத்த பாரம்பர்யம் விட்டு போய்விடக்கூடாது என்பதற்காக அன்ஷுவின் தம்பியான ஷுபம் மாலிக்கிற்கே முதலில் பயிற்சிகளை வழங்கியிருக்கிறார் அவருடைய தந்தை. குடும்பம் மொத்தமும் மல்யுத்த களத்தில் யுத்தம் செய்து கொண்டிருக்க, அன்ஷு மாலிக்கிற்கும் அந்த யுத்தத்தில் இறங்கி ஒரு கை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது.

அன்ஷு மாலிக்

11 வயதில் தன்னுடைய ஆசையை தந்தையிடம் தெரிவிக்க அவரும் முழுமனதுடன் அன்ஷுவுக்குப் பயிற்சி அளிக்க முன்வந்தார். ஒரு ஆறு மாத கால பயிற்சிக்கு பிறகே அன்ஷு ஒரு நல்ல மல்யுத்த வீராங்கனையாக உருவெடுக்கத் தொடங்கிவிட்டார். நான்கைந்து ஆண்டுகள் பயிற்சி செய்திருந்த வீராங்கனைகளை ஆறே மாதம் பயிற்சி செய்த அன்ஷு வீழ்த்தியதை பார்த்த தரம்வீர் மாலிக் ஆச்சர்யப்பட்டுப் போனார். தன்னுடைய மகனுக்கான பயிற்சிகளை ஒத்திவைத்துவிட்டு முழுமையாக அன்ஷுவை மல்யுத்த களத்திற்குத் தயார்ப்படுத்தத் தொடங்கினார்.

சிறுவயதிலேயே மல்யுத்தத்தின் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்த அன்ஷு 2016 ஆசிய கேடட் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2017 ல் உலக கேடட் தொடரில் தங்கப்பதக்கம் வென்றார். தொடர்ந்து, 2018 ஜுனியர்களுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கமும் ஆசிய கேடட் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கமும் வென்றார். ஜுனியர் பிரிவில் கலக்கிய அன்ஷு, சீனியர் பிரிவிலும் அட்டகாசப்படுத்தினார். 17 வயதிலேயே சீனியர் லெவலுக்கு வந்ததால், அன்ஷுவுடன் போட்டி போட்ட வீராங்கனைகள் எல்லாம் மூத்தவர்களாக பல பதக்கங்களை வென்றவர்களாக இருந்தார்கள்.

Also Read: ஒலிம்பிக் ஹீரோக்கள் – அபேப் பிகிலா: ஒட்டுமொத்த ஆப்பிரிக்க மக்களையும் பிகிலடிக்க வைத்த மாவீரன்!

ஆனால், இது எதையுமே அன்ஷு ஒரு தடையாக பார்க்கவில்லை. போடியத்தில் ஏறுவதுதான் ஒரே இலக்கு என அத்தனை தடைகளையும் அடித்து நொறுக்கினார். சீனியர் பிரிவில் அவர் அறிமுகமான மேட்டியோ பெலிகான் தொடரிலேயே வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.

கடந்த ஏப்ரல் வரை அவர் ஆடியிருந்த 6 சீனியர் தொடர்களில் ஐந்தில் பதக்கங்களை வென்றிருந்தார். இதில் மல்யுத்த உலகக்கோப்பையில் 57 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிட்டே ஆக வேண்டிய வெற்றி. இந்த உலகக்கோப்பையில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற ஒரே பெண் அன்ஷு மட்டுமே. மேலும், ஏப்ரலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆசிய தகுதிச்சுற்று போட்டியில் 57 கிலோ பிரிவில் இரண்டாமிடம் பிடித்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதியும் பெற்றார்.

மல்யுத்த களத்தில் அன்ஷு மாலிக்

பெருமிதம் பொங்க பேசியிருக்கிறார் அன்ஷுவின் தந்தையான தரம்வீர் மாலிக்.

2கே கிட்ஸ் என்றாலே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி கிடப்பார்கள் என்ற வாதத்தைத் தவிடு பொடியாக்கி இருக்கிறார் அன்ஷு மாலிக். அவரின் லட்சியம் வெல்லட்டும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.