நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் கௌரவ உறுப்பினர் அடையாள அட்டையை இசையமைப்பாளர் தினா, இன்று வழங்கினார்.

நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் கமல்ஹாசன் பாடகராகவும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். ’நினைவோ ஒரு பறவை’, ‘கண்மணி அன்போடு காதலன்’, ’தென்பாண்டி சீமையிலே’, ’போட்டு வைத்தக் காதல் திட்டம்’, ’உன்னை காணாது நான்’ உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை தான் நடிக்கும் படங்களில் மட்டுமல்லாமல் மற்ற நடிகர்கள் படங்களுக்கும் பாடி வருகிறார்.

image

46 ஆண்டுகாலம் பலப் பாடல்களைப் பாடி மக்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர் கமல்ஹாசனின் பாடகர் பணியை பாராட்டும் விதமாக திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தலைவர் இசையமைப்பாளர் தினா இன்று கெளரவ அடையாள அட்டையை நேரில் சந்தித்து வழங்கினார்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.