’ஸ்டாலின் தான் வராரு. விடியல் தரப்போறாரு’ பாடல் இசையமைப்பாளர் ஜெரார்டு ஃபெலிக்ஸ் திருமண வரவேற்பில் முதல்வர் நேரில் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தயாரித்த பாடல்களில் தமிழகம் முழுக்க கவனத்தை ஈர்த்தப் பாடல் என்றால் ‘ஸ்டாலின் தான் வாராரு. விடியல் தரப்போறாரு’ பாடல்தான். திமுகவினர் முணுமுணுக்கும் பாடலாக மாறிப்போனது.

image

பிரச்சாரத்தில் விமர்சிக்க எதிர்க்கட்சியினர் கூட இப்பாடலைப் பாடித்தான் விமர்சித்தார்கள். தேர்தலுக்கு முன்புதான் இப்படியென்றால், தேர்தல் முடிந்தபிறகும்  வானதி சீனிவாசன் உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தப் பாடலைச் சொல்லி இப்போது முதல்வர் மு.க ஸ்டாலினை விமர்சனம் செய்கிறார்கள். அந்தளவிற்கு கவனம் ஈர்த்த இப்பாடலுக்கு இசையமைத்தவர் ஜெரார்டு ஃபெலிக்ஸ்.

image

அந்தப் பாடலைப்போலவே முதல்வராக மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துவிட்டார். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜெரார்டு ஃபெலிக்ஸுக்கும் பிரேஷி சாந்தனாவிற்கும் நடந்த திருமண வரவேற்பில் முதல்வர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். அதோடு, கவிஞர் வைரமுத்துவும் தனது மகன்களுடன் கலந்துகொண்டு வாழ்த்தினார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

image

இசையமைப்பாளர் ஜெரார்டு ஃபெலிக்ஸ், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’மயூரான்’ படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவராக பணியாற்றியுள்ளதோடு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தேர்தல் பிரச்சார பாடலுக்கும் இசையமைத்துள்ளார். மேலும், பல இண்டிபெண்டண்ட் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

image

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.