யாரோ எழுதியதுதான். எல்லா அப்பாக்களும் ராஜாவாக இருப்பதில்லை. ஆனால் எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாகவும் இளவரசிகளாகவுமே அப்பாவால் வளர்க்கப்படுகிறார்கள். அவ்விதம் தமிழ் சினிமாவில் வெளிவந்த தந்தை பாசத்தை உணர்த்தும் டாப்-5 பாடல்கள் இதோ..
 
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
 
அப்பா மகளின் மீது வைத்திருக்கும் பாசத்தை அளவிட முடியாது என்பதை உணர்த்தும் விதமாக ‘தங்கமீன்கள்’ திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், நா முத்துகுமாரின் பாடல் வரிகளில் ஸ்ரீராமின் காந்தக் குரலில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலானது வெளியாகி ஹிட்டானது. மகளை பெற்ற ஒவ்வொரு அப்பாவும் இந்த பாடலை நெகிழ்ந்து கேட்பார்கள்.
 
உனக்கென்ன வேணும் சொல்லு
 
மகளின் மகிழ்ச்சிக்காக தன் வேலையையும் கோபத்தையும் விட்டுவிட்டுப் பாசப்பிணைப்பில் உருகும் தந்தையாக நடித்திருப்பார் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித். இந்த படத்தில் வரும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடலின் இசை, வரிகள், காட்சிகள் அத்தனையும் செம’ அழகு.
 
அன்புள்ள அப்பா அப்பா
 
அப்பாக்களை தொலைத்த அனைத்து மகன்களுக்கும் ‘சிகரம் தொடு’ படத்தில் வரும் இப்பாடல் சமர்ப்பணம். யுகபாரதி எழுதிய இப்பாடலில் ‘எனக்கெது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே’ எனும் வரிகள் உள்பட ஒவ்வொரு வரிகளும் கண்களை கசியச் செய்கின்றன.
 
கண்ணான கண்ணே
 
நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடல் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற பாடலாகும். தற்போது வரை பலரும் தங்களுடைய மொபைலில் ரிங்டோனாக வைத்திருக்கிறார்கள் இப்பாடலை. தந்தை-மகள் உறவுக்குப் பாலமாகவும், அந்த உறவுவை பலப்படுத்தவும் செய்திருக்கிறது இப்பாடல்.
 
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
 
உறவுகளின் பிணைப்பை நா.முத்துகுமாரை விட யார் அழகாக எழுதிவிட முடியும். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் வரும் ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ பாடலைக் கேட்கும்போது தந்தையின் முகம் கண்முன் வந்து குறுகுறுக்கும். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.