‘நெட்ஃபிளிக்ஸ் ஐடி கிடைக்குமா?’ என்று எங்கு பார்த்தாலும் கேட்கும் அளவிற்கு மந்திரம் போல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை எகிறவைத்துள்ளது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ’ஜகமே தந்திரம்’. இன்று உலகம் முழுக்க 17 மொழிகளில் வெளியாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பார்வையிலான விமர்சன தொகுப்பு இது…

Twitter/போலீஸ் ராட்ஸ்: “உண்மையா சொல்லனும்னா #JagameThandiram beats the expectation. தனுஷ் நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, இசை, பாடல்கள்னு நல்லா இருக்கு. Expectation இல்லாம பாக்குறவுங்களுக்கு பிடிக்கும்”.

Fb/ Abdul hameed sheik mohamed: “ஜகமே தந்திரம் படம் மூன்று நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் உணர்வு. இடையில் நான்கைந்து முறை தூங்கி எழுந்துவிட்டேன். வழக்கமான அளவிலேயே எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை இவ்வளவு நீளமான திரைப்படமாக உணரச் செய்ய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஏதோ ஒரு புதுமையை இதில் பயன்படுத்தியிருக்கிறார். அந்த அடிப்படையில் இந்தப் படம் கின்னஸில் இடம்பெற வாய்புள்ளது.”

Fb/ நா. சாத்தப்பன்: “நான் அந்த மரண , சூர மொக்கை ” ஜகமே தந்திரம் ” படத்தையும் அதை டைரக்ட் பண்ண கார்த்திக் சுப்பராஜையும் கூட மன்னிசிடுவேன். ஆனா, இந்த படத்தை தியேட்டர்லதான் வெளியிடணும்னு தயாரிப்பாளரை டார்ச்சர் பண்ணி ஓவர் சீன் போட்டு நடிச்சதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன். படம் மட்டும் தியேட்டர்ல வந்திருந்தா அவர் ’தமிழ் படம் 2’ ல வர்ற மாதிரி சைக்கிளில்தான் போய் இருந்திருப்பார்.”

Twitter/ Baskaran l sekar: “ஜகமே தந்திரம் நமக்கு புரிய வைக்கிறது. இலங்கையில் உள்ள ஈழத்தவர்கள் அகதிகள் இல்லை, அவர்களும் தமிழர்கள்தான்.”

Twitter/ எதிர்கட்சி தலைவர்: “தமிழ் சினிமா இயக்குனர்களிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள். விவசாயம், இலங்கைத் தமிழர். எப்பா டேய்… “ஜகமே தந்திரம்”.

Fb/Sathishkumar subramanianm: “ஜகமே தந்திரம் நவயுக இயக்குநர்கள் மிகச்சரியா ரெண்டே ரெண்டு படத்துக்கு மட்டும் “சரக்கு” வச்சிருக்கறாங்க. ஒரு படம் எப்படி ஸ்டைலிஷா அவுட்புட் எடுக்கறதுன்னு தெரிஞ்சி வச்சிருக்கிறாங்க. அப்புறம் படங்கள்ல போராளி பார்வை, இன அரசியல்னு பேசினா கடல் கடந்த வியாபாரத்துக்கும் தங்களுடைய ஃப்யூச்சர் பிழைப்புக்கும் யூஸ் ஆகும்னும் தெரிஞ்சி வச்சிருக்கறாங்க.

ஆனா மணிரத்னத்தும் மணிவண்ணனுக்கும் சினிமால எந்த அளவு அரசியல் பேசனுங்கறதும் அதை எவ்வளவு நுட்பமா காட்டினா ரசிக்க வைக்க முடியுங்கறதுமான வித்தை கைவசம் இருந்தது. அதற்கு அவர்களிடம் விசாலமான பார்வையும் புத்தக அறிவும் அனுபவமும் இருந்தது. கூகுளும் உலகப்பட சிடிக்களையும் வைத்து பிழைப்பு நடத்தி கொண்டிருக்கும் நவயுக இயக்குநர்களிடம் இதெல்லாம் எதிர்பார்க்க கூடாது தான்.

பேட்டை வரை கார்த்திக் சுப்பராஜ் மீது ஒரு மரியாதை கலந்த எதிர்பார்ப்பு இருந்தது. மெர்க்குரின்னு ஒரு படம் எடுத்தாரே… அதில் ஆரம்பித்தது சரிவு. இதில் தனுஷ் கொடுத்திருக்கும் அசுர உழைப்பு, அட்டகாசமான காஸ்டிங், ஏகப்பட்ட செலவு என அனைத்தையும் ஒரு சேர வீணடித்திருக்கிறார். வெற்று பில்டப் காட்சிகளுக்காகவே எவ்வளவு நேரம் தான் பல்லை கடித்து கொண்டு படம் பார்ப்பது… படு தட்டையான.. சூட்சுமங்கள் ஏதுமற்ற.. எந்த எதிர்பார்ப்பையும் திரைக்கதையில் ஒளித்து வைத்திராத.. படத்திற்கு “ஜகமே தந்திரம்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.”

image

Twitter/ராஜேந்திரன்: ”துரோகம் = நம்ம இனத்தோட சாபம். இந்த ஒற்றை வரி கண்ண கலங்க வச்சிடுச்சி.”

Twitter/ மதுரை பிரபு: ”பேட்ட படத்தில் ரெண்டு குரூப்பை அடிச்ச மாதிரி ஜகமே தந்திரம் படத்திலும் அடித்து விட்டார் கார்த்திக் சுப்பராஜ்.”

FB/ சோ நாகராஜன்: ”மஞ்சள் கலரில் சிவதாஸ், பீட்டர், சுருளின்னு பேர் போட்டு கதை சொல்ல ஆரம்பிச்சதும் , என்னடா இது Quentin Tarantino ஸ்டைல்ல இருக்குது இன்னைக்கு ஒரே அமளிதுமளி ஆகப்போகுதுன்னு சந்தோஷமா படத்தை பார்த்தேன். கொஞ்ச நேரத்துல கடுப்பாகி இந்த கருமத்தோட டைரக்டர் யார்ன்னு கேட்டா பேட்டை எடுத்த கார்த்திக் சுப்புராஜாம் . ஏம்பா! இத மொதல்லயே சொல்றதில்லையா ஆரம்பத்துலயே ஆப் பண்ணிருப்பேன்ல? அப்டின்னு சொல்லிட்டு இப்ப சுட்டி டிவி பார்த்திட்டு இருக்கேன்.”

Twitter/ E-Raj ARA: “ஜகமே தந்திரம் படத்தில் ஈழத் தமிழர்களை ஆயுதம், தங்க கடத்தல்காரர்களாக பாவித்துள்ளார் இயக்குனர். Familyman2-க்கு பொங்குன, ஒரு தமிழன கூட காணம் திரையுலக பாராட்டு, பேட்டி வேற… ஆனா அவன் சொன்னதுல ஒண்ணு மட்டும் உண்மடா, துரோகம், தமிழினத்தின் சாபம்.”

FB/ Milo sai: “படம் ஒடுது ஒடுது ஒடிகிட்டே இருக்கு…. எதுக்கு ஒடுதுனே தெரியலை…. மேலே சொன்ன மாதரி ஒரு அஞ்சு ஆறு சீன் நல்லா இருக்கும்… மத்தபடி அதே பழைய கதைதான், அதே பழைய சீன் தான். லண்டன்ல எல்லாம் போலீஸ் இருக்கானு தெரியலை… அவன் அவன் துப்பாக்கி எடுத்துகிட்டு அங்குட்டும் இங்குட்டும் ஒடுறான்… கதையா கேட்டா இந்த படம் நல்லா தான் இருக்கும்.. ஆனால், திரைக்கதை சொதப்பல்… casting எல்லாம் ரொம்ப poor.. கலையரசனே பார்த்தாலே ஏதோ ரஞ்சித் படம் ஃபீல் தான் வருது…

எவ்வளவு தமிழ் நடிகர்கள் இருக்காங்க.. எதுக்கு ஜோஜி ஜார்ஜ்? வேற நடிகர்கள் இல்லையா… அதுபோல் லண்டனில் தனுஷ் கூட வரும் அந்த சாஃப்ட்வேர் எஞ்சினியர் கதாபாத்திரத்திலும் வேறு யாரையாவது நடிக்க வைத்து இருக்கலாம். எரிச்சல் முட்டும் நடிப்பு. சந்தோஷ் நாராயணின் பின்னனி இசை மிரட்டுகிறது. இறுதி காட்சியில் ஏன் we ll rock you பாடல் bgm-ஐ பயன்படுத்தினார் என தெரியவில்லை. ஒளிப்பதிவு அற்புதம். தேவை இல்லாத ஆணி சீன்களை பலவற்றை வெட்டி தூக்கி எறிந்து இருக்கலாம். படத்தில் ஒரே நல்ல விஷயம்… my rating 2 out of 5
ரொம்ப expect பண்ணினேன்… கவுத்து விட்டார்கள்.”

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.