தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தனுஷ் நடிப்பில் இன்று ‘ஜகமே தந்திரம்’ வெளியாகி இருக்கிறது. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ‘அட்ராங்கி ரே’, ரூசோ பிரதர்ஸின் ‘தி க்ரே மேன்’, செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘தனுஷ்43’ ராம்குமார் இயக்கத்தில் பெயரிடாதப்படம் என்று தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், இன்று தனுஷின் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

image

தெலுங்கின் முன்னணி இயக்குநரும் தேசிய விருது பெற்ற இயக்குநருமான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ‘டாலர் ட்ரீம்ஸ்’ படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை சேகர் கம்முலா வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2007 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த ‘ஹேப்பி டேஸ்’ படத்தையும் இவர்தான் இயக்கியிருக்கிறார். இப்படம் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் தமிழில் ‘இனிது இனிது’ என்று ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. சேகர் கம்முலா தனது படங்களுக்காக இதுவரை 5 முறை சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் 4 முறை நந்தி விருதுகளையும் குவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.