பிரபல நடிகை தமன்னா டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார்.

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் தமன்னா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெப் சீரிஸுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதேபோல், தெலுங்கு நடிகர் கோபிசந்த் உடன் இவர் நடித்துள்ள ‘சீட்டிமார்’ வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. மேலும், மற்றொரு தெலுங்கு நடிகர் நிதின் ஹீரோவாக நடிக்கும் ‘மேஸ்ட்ரோ’ படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்து வருகிறார்.

இந்தநிலையில், தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக களமிறங்க இருக்கிறார். அவர் தொகுத்து வழங்க இருப்பது தமிழ் டிவி நிகழ்ச்சி அல்ல, அதுவொரு தெலுங்கு நிகழ்ச்சி. இந்திய தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஸ்டார் பிளஸில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட ‘மாஸ்டர் செஃப்’ தான் அது.

image

இந்த நிகழ்ச்சி இப்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்பட இருக்கும் நிலையில், தெலுங்கு வெர்ஷனைதான் தமன்னா தொகுத்து வழங்க இருக்கிறார். அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கும், இதற்காக அதிக தொகையை ஊதியமாக பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, இதே நிகழ்ச்சியை மற்ற தென்னிந்திய மொழிகள் ஆண் நடிகர்கள் தொகுத்து வழங்க, ஒரே ஒரு பெண் நடிகராக தமன்னா தெலுங்கில் தொகுத்து வழங்க இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதியும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் இதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.