பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி ‘கவாச் தனிநபர் கடன்’ (SBI KAVACH Personal Loan Scheme) என்ற பெயரில் புதிய தனிநபர் கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. கொரோனா கால பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு இக்கடன் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

நோக்கம்:

SBl வாடிக்கையாளர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கொரோனவால் பாதிக்கப்பட்டால், அதற்கான சிகிச்சை உள்ளிட்ட செலவுகளை ஈடுசெய்யும் நோக்கில், கொரோனா கால கவசம் போன்று இக்கடன் வழங்கப்படுகிறது.

கட்டுப்பாடுகள்:

*இது ஒரு தனிநபர் கடன்.(Personal loan)

*ஏப்ரல் 1,2021 மற்றும் அதற்குப் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் அல்லது குடும்பத்திற்கு கடன் வழங்கப்படும்.

*வங்கியின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டு, கடன் பெறத் தகுதியான (சிபில்) ClBlL நடைமுறைகள் உறுதிசெய்யப்படும்.

*ரூபாய் 25,000 முதல் 5,00,000 வரை தகுதிக்கும், தேவைக்கும் ஏற்ப கடன் வழங்கப்படும்.

*இதற்கு முன்பு தனிநபர் கடன் பெற்று திரும்ப செலுத்தி வந்தாலும், போதுமான திரும்ப செலுத்தும் தகுதி இருப்பின் இக்கடன் வழங்கப்படும்.

Representational Image

வசதிகள்:

# வாடிக்கையாளர் வங்கிக் கிளைக்குச் சென்று கடன் விண்ணப்பத்தையும், ஆவணங்களையும் அளிக்கலாம்.

# Yono Cash வழியே App மூலமாக வீட்டிலிருந்தே (Pre approved personal loan) விண்ணப்பிக்கவும் வசதியுண்டு.

# சம்பளதாரர்,ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சேமிப்புக் கணக்கு பராமரிக்கும் அனைவருக்கும் தகுதியிருப்பின் இக்கடன் வழங்கப்படும்.

# செயல்படுத்துதல் கட்டணம் (Processing fee) கிடையாது.

# கடனுக்கு நிகரான பிணை சொத்துகள் எதுவும் தேவையில்லை.

# முன்கூட்டியே திரும்ப செலுத்துதல் கட்டணம் (Foreclosure Charges) இல்லை.

# திரும்ப செலுத்தும் காலகட்டம் அதிகபட்சம் 60 மாதங்கள். 3 மாதங்கள் கடன் தள்ளிவைப்பு கால (Moratorium) வசதியுண்டு. எனவே அதிகபட்சம் 57 மாதங்களில் கடனை திரும்ப செலுத்தலாம். (3 மாத கடன் தள்ளிவைப்பு காலத்திற்கு வட்டி உண்டு)

# 8.50% வட்டி தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும். எனவே கடன் தேவைப்படும் SBI வாடிக்கையாளர்கள் இவ்வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிற வங்கிகளும் இதுபோன்ற அவசரகால கடன்களை விரைவில் வழங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்!

அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.