பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள பணத்தாள்கள் செல்லாது என 2016-ல் மத்திய அரசாங்கம் அறிவித்த பிறகு, புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

அதன்பிறகு ரூ.200 மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளையும், கூடவே, புதிய 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளையும் இந்திய ரிசர்வ் வங்கி வெவ்வேறு வண்ணங்களில் அறிமுகப்படுத்தியது. நடப்பு 2021-ம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி, புழக்கத்தில் இருக்கும் மொத்த பணத்தாள்களின் மதிப்பு ரூ.28.27 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இது 16.8% அதிகமாகும்.

பணம்

ஆனால், ரூ.2,000 நோட்டுகள் வெளிவந்த ஆரம்பத்தில், மக்கள் முதல் வணிகர்கள் வரை அனைவரும் சில்லறை மாற்றுவதற்கு பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். இதன் காரணமாக ரூ.2,000 தாள்களைப் புழக்கத்துக்கு விடுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி, தற்போது ரூ.2,000 தாள்கள் அச்சிடுவதையே ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.

அதே போல தற்போது புழக்கத்தில் இருக்கும் அதிக மதிப்பு கொண்ட ரூ.500 நோட்டுகளுக்கு சில்லறை மாற்றுவதற்கும் சிக்கல் உருவாகியிருக்கிறது. ஏனெனில், புழக்கத்தில் மற்ற நோட்டுகளின் எண்ணிக்கை குறைவாகவும், ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, ரிசர்வ் வங்கியின் 2020-2021-ம் ஆண்டிற்கான நிதி அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களும் உள்ளன.

ரிசர்வ் வங்கி

Also Read: `சில்லறை மாற்ற சிரமம்; 2,000 ரூபாய் நோட்டுகள் வேண்டாம்!’ – சர்ச்சையான இந்தியன் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டிருக்கும் நிதிநிலை அறிக்கையில், மார்ச் 2021 நிலவரப்படி, புழக்கத்தில் இருக்கும் அனைத்து ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில், ரூ.500 நோட்டுகளில் எண்ணிக்கை 31.1 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலட்டத்தில் 25.4 சதவிகிதமாக இருந்தது எனவும், அதற்கு முந்தைய 2019-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 19.8 சதவிகிதமாக இருந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம், ரூ.100 மதிப்புள்ள நோட்டுகளின் எண்ணிக்கை மார்ச் 2021-ல் 15.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது மார்ச் 2020-ல் 17.2 சதவிகிதமாக இருந்தது. ரூ.10 மதிப்புள்ள நோட்டுகளும் 26.2 சதவிகிதத்திலிருந்து 23.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுகளின் எண்ணிக்கை, மொத்த ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தில் 17.3% பங்கு வகிப்பதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 22.6 சதவிகிதமாகவும், 2019-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 31.2 சதவிகிதமாகவும் இருந்தது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.