”கொரோனா ஊரடங்கு முடிந்ததும் உங்களைச் சந்திக்கிறேன்” என்று நகைச்சுவை நடிகர் கிங்காங்கிடம் ரஜினிகாந்த் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 1990 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த்தின் ‘அதிசயப்பிறவி’ படத்தில் நடித்து புகழ்பெற்றார் நகைச்சுவை நடிகர் கிங்காங். அதன்பிறகு, ‘ஜமீன் கோட்டை’ பேய் படத்தில் நடித்தும் இன்னும் கவனம் ஈர்த்தார். ‘போக்கிரி’, ‘கருப்பச்சாமி குத்தகைத்தாரர்’, ‘இந்திர லோகத்தில் நா. அழகப்பன்’, ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ’சுறா’, கந்தசாமி’ உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் “பத்து வருடங்களுக்கு முன் நான் விருது வாங்கினேன். அந்த விருதை சூப்பர் ஸ்டார் ரஜினி கையால் வாங்கவேண்டும்” என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.


இந்த தகவல் குறித்து கேள்விப்பட்ட ரஜினி கிங்காங்கிற்கு போன் செய்து நலம் விசாரித்ததோடு “லாக்டவுன் முடியட்டும். நான் ஊரில் இருக்கிறேன். அடுத்தமாதம் ஒரு சமயம் கண்டிப்பாக மீட் பண்ணலாம். கொரோனா கொஞ்சம் கம்மியாகட்டும். என்னிடம் கேட்க வெட்கப்படாதீர்கள். பட வாய்ப்பு ஏதாவது வேண்டும் என்றாலும் கேளுங்கள்” என்று கிங்காங்கிடமும் அவரது அம்மாவிடமும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. நடிகர் கிங்காங்கின் ஒரிஜினல் பெயர் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.