17 மொழிகளில் வெளியாகும் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’!

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படம் நேரடியாக NetFlix ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. மேலும் இந்தப் படத்தை ஏராளமான மொழிகளில் டப் செய்து வெளியிடவுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில் இந்திய மொழிகளை தவிர ஆங்கிலம் உள்ளிட பிற மொழிகளிலும் ஜகமே தந்திரம் டப் செய்யப்படுகிறது. அதுவும் 17 மொழிகளில் NetFlix தளத்தில் வெளியிடவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பல தமிழ் திரைப்படங்கள் ஓ.டி.டியில் வெளியானாலும் அதிக மொழிகளில் டப் செய்யப்படவில்லை. முதன்முறையாக ஜகமே தந்திரம் 17 மொழிகளில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM