முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் ஸ்டாலின், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து, மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.
மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. @mkstalin அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்!
— Actor Karthi (@Karthi_Offl) May 3, 2021
முன்னதாக, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 74 இடங்களில் மட்டும் வென்று தோல்வியை சந்தித்துள்ளது. வரும் 7 ஆம் தேதி ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார்.