கோலிவுட்டில் மீண்டும் நேரடி ஓடிடி ரிலீஸ் திருவிழா ஆரம்பம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டெளன் அறிவிக்கப்பட, தமிழ் சினிமா அப்படியே ஸ்தம்பித்து நின்றது. ‘அடுத்து என்ன?’ என எல்லோரும் வழி தெரியாமல் திகைத்து நின்றபோது சூர்யாவின் 2டி நிறுவனம் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை நேரடி ஓடிடி ரிலீஸ் செய்து புது வழிகாட்டியது. இதனைத்தொடர்ந்து பல்வேறு படங்கள் ஓடிடியில் நேரடி ரிலீஸ் கண்டன. சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படமே நேரடி ஓடிடி ரிலீஸ் ஆனது. விஜய் நடித்து வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் 2021 பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆனாலும், 15 நாட்களில் ஓடிடி-க்கு வந்துவிட்டது. இந்நிலையில்தான் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன.

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்து ஓரளவு இயல்பு நிலை திரும்ப எப்படியும் செப்டம்பர் மாதம் ஆகிவிடும் என்பதால் ரிலீஸுக்கு காத்திருந்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் உள்பட பல படங்கள் நேரடி ஓடிடி ரிலீஸுக்குத் தேதி குறித்திருக்கின்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கி, சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘டாக்டர்’ படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் போட்டிப்போட்டன.

கடந்த ஆண்டு தமிழ் படங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டிய அமேஸான் ப்ரைமை, இம்முறை ஹாட் ஸ்டார் முந்தியிருக்கிறது. பெரும்பான்மையான படங்களை இப்போது ஹாட் ஸ்டாரே வாங்குகிறது. நேரடி ரிலீஸுக்கு ‘டாக்டர்’ பட தயாரிப்பு நிறுவனம் 50 கோடிகளை எதிர்பார்க்க, ஓடிடி தரப்பிலோ 42 கோடிக்கு டீல் பேசப்பட்டு வருவதாகத் தெரிகிறது. ஹாட்ஸ்டார் விரைவில் டீலை முடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

பார்த்திபன் – விஜய் சேதுபதி – துக்ளக் தர்பார்

‘டாக்டர்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படமும் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸாகயிருக்கிறது. இந்தப்படத்தையும் ஹாட்ஸ்டாரே வாங்குகிறது. அதேப்போல் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ படமும் ஹாட்ஸ்டாரில் வெளியாகயிருக்கிறது.

நயன்தாரா நடித்திருக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தை அமேஸான் ப்ரைம் வாங்கியிருக்கிறது. விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் ‘கோப்ரா’ படமும் நேரடி ஓடிடி ரிலீஸுக்கு விற்க பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கின்றன.

கடந்த மார்ச்சில் தியேட்டரில் வெளியாகியிருக்கவேண்டிய தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தை நேரடி ஓடிடி ரிலீஸுக்கு வாங்கியிருந்தது நெட்ஃபிளிக்ஸ். மே மாதம் இப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது ரிலீஸ் ஜூனுக்குத் தள்ளிப்போயிருக்கிறது.

இதற்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து தியேட்டரில் வெளியான ‘கர்ணன்’ படம் மே இரண்டாவது வாரத்தில் அமேஸான் ப்ரைமில் ப்ரிமியர் காண இருக்கிறது. அதேப்போல் கார்த்தியின் ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 30-ம் தேதி ஹாட்ஸ்டார் ப்ரிமியருக்குக் காத்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.