சின்னக் கலைவாணர் விவேக்கின் மறைவு சினிமா திரை உலகில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவருடைய மறைவையொட்டி அவருடன் நடித்த சக கலைஞர்கள் அவரை எப்படி மதித்துப் போற்றுகிறார்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.

வடிவேலு: “விவேக்கின் ரசிகன் நான். என்னைவிட யதார்த்தமாக, எளிமையாக மனதில் பதியக் கூடிய வகையில் பேசக் கூடியவர். வெளிப்படையாக எதையும் பேசக் கூடிய மிக நல்ல மனிதர்.”

யோகிபாபு: “விவேக் நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதர். சக காமெடி நடிகரை உயர்த்தி விடும் ஒரே நடிகர்.”

கோவை சரளா: “மனிதநேயம் மிக்க மனிதர் விவேக்”

செந்தில்: திரைத்துறையில் திறமையான மனிதர் விவேக்

சார்லி: “நகைச்சுவை நடிகர்களிலேயே விவேக்தான் ஹீரோ. சக நண்பர்கள் மறைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவுவார்.”

சூரி: “விவேக் காமெடியன் அல்ல; உண்மையான ஹீரோ.”

மயில்சாமி: “தர்மம் செய்வதில் எம்ஜிஆர் போன்றவர். ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவியவர்.”

தாமு: “மிகப்பெரிய சமூக அக்கறை உள்ள பொதுநலவாதி.”

எம்.எஸ்.பாஸ்கர்: தன்னை பற்றி பேசாமல் பொதுப்பணிகளை பற்றி மட்டுமே பேசுவார்.”

வையாபுரி: “நான் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க காரணமானவர் விவேக்.”

இமான் அண்ணாச்சி: “இளம் கலைஞர்களை சரிசமமாக நடத்துபவர் விவேக்.”

image

காளி வெங்கட்: “விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு.”

போண்டா மணி: “அனைவருக்கும் உதவி செய்யும் நல்ல மனிதர்.”

கணேஷ்: “கடைசி வரை மக்களுக்கான கருத்துக்களை கூறிவந்தவர்.”

ஆர்த்தி: “மக்களை சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்துள்ளார்.”

கஞ்சா கருப்பு: “நகைச்சுவை நடிகர்களிலேயே விவேக் தான் சிறந்த மன்னர்.”

சிங்கம்புலி: “சினிமா மூலமாக விவேக் எப்போதும் கூடவே இருப்பார்.”

‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்: “விவேக்கின் மரணம் வருத்தமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.”

அனு மோகன்: “விவேக்கின் மறைவு இந்திய திரையுலகிற்கே மாபெரும் இழப்பு.”

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.