தலைக்கேறிய போதையில், 75 அடி கிணற்றில் இளைஞர் ஒருவர் விழுந்து இறந்த சம்பவம், உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கிணறு

Also Read: நாமக்கல்: பெண் குழந்தை மர்ம மரணம்! -அவசரமாகப் புதைக்கப்பட்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை

கரூர் மாவட்டம், தோகைமலை அருகில் உள்ள போத்துராவுதன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் மகேஷ்வரன் (வயது 32). இவர், கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைலில் டெய்லராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல்15 – ம் தேதி இரவு சுமார் 7 மணியளவில், தனது இருசக்கர வாகனத்தை போத்துராவுதன்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள 75 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகில் நிறுத்தி வைத்துவிட்டு, அங்கேயே அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

அதோடு, கிணற்றின் ஓரமாக ஒரு காலையும், கிணற்றின் உள்பக்கமாக மற்றொரு காலையும் வைத்து அமர்ந்தபடி செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை, ஊர்க்காரர்கள் பார்த்து கண்டித்துள்ளனர். இருப்பினும், அவர்களிடம் மது போதையில் தகராறு செய்துள்ளார். ஊர்மக்கள் சொல்லியும் கேட்காமல் அதே நிலையில் அமர்ந்துபடி இருந்துள்ளார். இதனால், ஊர் மக்கள், ‘நமக்கேன் வம்பு’ என்று அவரை கண்டுக்கொள்ளாமல் சென்றுவிட்டனர்.

மகேஷ்வரன் உடல்

இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் போத்துராவுதன்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் 75 அடி உள்ள பொது கிணற்றில் 15 அடி தண்ணீரில் மகேஷ்வரனின் உடல் மிதக்க, அதை பார்த்த பொதுமக்கள் அதிர்ந்துபோயுள்ளனர். உடனடியாக, தோகைமலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீஸார் உதவியுடன், முசிறி தீயணைப்பு துறையினர், கிணற்றில் மிதந்த மகேஷ்வரனின் உடலை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து வழக்கை பதிவு செய்ததோடு, மகேஷ்வரன் மதுபோதையில் கிணற்றுக்குள் விழுந்து விழுந்தாரா அல்லது குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில், தோகமலை காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.